இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விஜய்க்கு கதை சொல்லியிருப்பதாகவும் விரைவில் அவரை இயக்க இருப்பதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘சர்பாட்டா பரம்பரை’ படத்தின் முதல் லுக் வெளியானது.
இதில் ஆர்யா, கலையரசன், சஞ்சனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 80களில் வட சென்னையில் நடக்கும் பாக்ஸிங் வீரரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என இந்த படம் குறித்தான தகவல் வெளிவந்திருந்தது. கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த படத்திற்காகவும் பாக்ஸர் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காகவும் ஆர்யா பாக்ஸிங், உடற்பயிற்சி என கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டதையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
READ ALSO- பிக்பாஸ் கவினுக்கு திருமணம்?
இது குறித்தான அறிவிப்பை நேற்றே படக்குழு வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், படம் குறித்து இயக்குநர் பேசும்போது, ’காலா’ முடித்த சமயத்தில் நான் நடிகர் விஜய்க்கு கதை சொல்லியிருந்தேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதன் பிறகு, லாக்டவுண், அடுத்தடுத்த படங்களில் இருவருமே பிஸி. விரைவில் அவரை இயக்குவேன்’ என தெரிவித்துள்ளார்.