தனுஷ் பாடிய ‘டாடா பாய் பாய்’ பாடல் வெளீயீடு..!!

தனுஷ் பாடிய ‘டாடா பாய் பாய்’ பாடல் வெளியாகியுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் தனுஷ் பாடியுள்ள பாடலை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது

கடந்த 2009 ஆம் ஆண்டு ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் எம்.ராஜேஷ், ’பாஸ் என்கிற பாஸ்கரன்’, ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் கவனத்தை ஈர்த்தார். இவர் தற்போது இயக்கிவரும் ‘வணக்கம்டா மாப்ள படத்தில் ஜிவி பிரகாஷ், அம்ருதா ஐயர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்கிறார். இப்படத்தில் இடம்பிடித்துள்ள ‘டாடா பாய் பாய்’ பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

’என் லவ்வு ஒரு டாப்பு கிழிஞ்ச ஷேர் ஆட்டோ, என் ஹார்ட் இப்போ கேஸ் போன பிராட்டம்’ என தனுஷ் குரலில் பாடுவதை முதல் தடவை கேட்கும்போதே முணுமுணுக்க வைக்கிறது என சொல்கின்றனர். நிச்சயம் இந்த வருட பாடல்களில் டாடா பாய் பாய்க்கும் இடமுண்டு. ஆனால், ஏற்கெனவே வெளியான பல குத்துப் பாடல்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

Exit mobile version