நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த ‘மாநாடு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடிகர் சிலம்பரசன் வெங்கட் பிரபுவின் ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்தில் ‘அப்துல் காலிக்’ என்ற இஸ்லாமியராக சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அண்மையில் இதன் ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியிருந்த நிலையில், சிம்புவின் பிறந்தநாளையொட்டி ’மாநாடு’ டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி டீசரை ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார்.
டீசரில் சிம்பு இடம்பெறும் காட்சிகள் அவர் மட்டும் லைவ்வில் இருக்கிறார். மற்ற அனைத்து காட்சிகளும் ரிவைண்டில் செல்கின்றன. காவல்துறை அதிகாரியாக எஸ்.ஜே சூர்யா மிரட்டுகிறார். இதேபோன்று மலையாள டீசரை நடிகர் பிரித்திவிராஜும், இந்தி டீசரை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்பும், கன்னட டீசரை கிச்சா சுதீப்பும், தெலுங்கு டீசரை ரவி தேஜாவும் வெளியிட்டிருக்கிறார்கள். டீசரில், “காலம் யார் ஒருவருக்காகவும் காத்திருக்காது, ஒருவேளை யாருக்காகவாவது காத்திருந்தால்” என்ற வசனம் எழுத்தில் இடம்பெறுகிறது.