படமே ரிலீஸ் ஆக போகுது… டிரைலர் எப்பப்பா ரிலீஸ்..

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டிரைலர் எந்த நேரத்திலும் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30-ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ’சூரரைப் போற்று’படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தத் தகவலை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இப்படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Exit mobile version