“செத்த பயலுவலா” புகழ் ஜி.பி. முத்து படத்தில் நடிக்கிறார்

டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து புதுப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

“செத்த பயலுவலா” என்ற வார்த்தை மூலம் டிக்டாக்கில் பிரபலமானவர் ஜி .பி. முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து, பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். தென் மாவட்டத்திற்கு உரித்தான எதார்த்தமான தமிழ் பேச்சால் டிக்டாக்கில் ஏராளமானவர்கள் இவரை பின்தொடர்ந்தனர். இவரது வீடியோக்கள் ஏராளமான லைக்குகளை வாங்கி குவிக்கும். டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். சில குறும்படங்களில் நடித்த இவர், நாளை புதுபடம் படப்பிடிப்பு என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளை வேட்டி சட்டையில் பட்டு துண்டு அணிந்து புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகைப்படத்துக்கு வழக்கம்போல கேலியாகவும், கிண்டலாகவும்  கமெண்டுகள் பதிவாகி வருகின்றன.

Exit mobile version