அனுஷ்காவுக்கு டும்!டும்!டும் புதுப்படத்துக்கு நோ சொன்ன அனுஷ்கா

முந்தானை முடிச்சு 2 படத்தில் நடிக்க அனுஷ்கா மறுப்பு தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் முந்தானை முந்தானை முடிச்சு .இத்திரைப்படத்தை பாக்கியராஜ் நடித்து,இயக்கியிருந்தார்.

மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.வசூல் ரீதியாகவும்,விமரசன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களை இரண்டாம் பாகம் எடுப்பது வழக்கம்.

அந்த வகையில் முந்தானை முடிச்சு -2 படத்தில் சசிகுமார் நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது.கதாநாயகி கேரக்டருக்கு அனுஷ்காவை அணுகிய போது நடிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.இது குறித்து அனுஷ்கா கூறும்போது விரைவில் திருமணம் நடைபெறயிருப்பதால் புதிய படங்களில் நடிக்க முடியாது என கூறினார்.

Exit mobile version