ஒரு கோடி ரூபாய்க்கு கார் வாங்கிய டிவி நடிகை

பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வால்வோ காரை வாங்கியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவர் நியா ஷர்மா (Nia Sharma). இவர் சமூக வலை தளங்களிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். தற்போது புத்தம் புதிய வால்வோ எக்ஸ்சி90 டி5 இன்ஸ்க்ரிப்ஷன் (Volvo XC90 D5 Inscription) கார் ஒன்றை நியா ஷர்மா வாங்கியுள்ளார்.

இது மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார் ஆகும். வால்வோ எக்ஸ்சி90 டி5 இன்ஸ்க்ரிப்ஷன் காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 87.90 லட்ச ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு விலை 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கியதற்காக சமூக வலை தளங்கள் மூலம் நியா ஷர்மாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மும்பையில் உள்ள ஒரு வால்வோ ஷோரூமில் எக்ஸ்சி90 டி5 இன்ஸ்க்ரிப்ஷன் காரை நியா ஷர்மா டெலிவரி எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனுடன், ”நீங்கள் மகிழ்ச்சியை வாங்க முடியாது. ஆனால் கார்களை வாங்கலாம். அவை இரண்டுமே ஒரு விஷயம்தான்” என எழுதியுள்ளார். Khatron Ke Khiladi என்ற ஸ்டண்ட் ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளர் நியா ஷர்மா.  இந்திய பிரபலங்களில் சிலர் மட்டுமே வால்வோ கார்களை வாங்குகின்றனர்.  அதிலும் டிவி நடிகை ஒருவர் இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கியதை கண்டு பாலிவுட் பிரபலங்கள் வாய் பிளந்துள்ளனர்.

Exit mobile version