ரூ. 2 லட்சம் மதிப்பிலான பைக்கை திருடனிடம் பறிகொடுத்த மணிமேகலை..!!

Manimegalai

பிரபல விஜய் டி.வி தொகுப்பாளர், தொலைக்காட்சி நடிகையுமான மணிமேகலையின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு. கடந்த இரண்டு சீசன்களாக வெற்றிப் பெற்ற இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனும் பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து மூன்று சீசன்களிலும் ரசிகர்களால் விரும்பப்படும் கோமாளியாக இருப்பவர் மணிமேகலை. இவருடைய கணவர் ஹூசைனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே.டி.எம் நிறுவனத்தின் விலை உயர்ந்த பைக்கை வாங்கிக் கொடுத்தார்.

அசோக் நகரிலுள்ள ஹூசைனின் நண்பர் வீட்டில் இந்த பைக் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை சென்று பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதையடுத்து அசோக் நகர் காவல்நிலையத்தில் பைக் திருட்டு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பைக்கின் மாடல் மற்றும் பதிவெண்ணை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மணிமேகலை பதிவிட்டுள்ளார். விரைந்து பைக்கை கண்டுப்பிடித்து தரவேண்டும் என காவல்துறையினருக்கு பதிவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version