செம்ம ஹேப்பியில் விக்கி – நயன்… சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்தி வரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம், அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான ‘கூழாங்கல்’ படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது. இந்த படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைத்தனர். அதில் நெதர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதையும், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றது.

இந்நிலையில் ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022மார்ச் 27ல் நடைபெற உள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ளத் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலிருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி பாராட்டைப் பெற்ற மண்டேலா திரைப்படமும் தேர்வாகி உள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை. நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியானது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் தவிர்த்து இந்தியில் வித்யா பாலன் நடித்த ஷெர்னி, விக்கி கவுஷல் நடிப்பில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான சர்தார் உத்தம், மலையாளத்தில் நாயாட்டு உள்ளிட்ட 14 படங்கள் தேர்வாகி உள்ளன. தற்போது அந்த வரிசையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்த கூழாங்கல் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

Exit mobile version