திருப்பதி விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம்..!!

vignesh shivan nayanthara marriage
Vignesh shivan

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

தமிழ் திரைத்துறையில் கதாநாயகர்களுக்கு இணையான புகழுடன் வலம் வருபவர் நயன்தாரா. நானும் ரவுடிதான் படத்தில் நடித்து போது அவருக்கும் பட இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் உருவானது. அதை தொடர்ந்து நீண்ட நாட்களாக ஒன்றாக வசித்து வந்தனர்.

கடந்தாண்டு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நயன்தாரா நேர்காணல் அளித்திருந்தார். அதில் விக்னேஷ் சிவனுக்கும் தனக்கும் திருமண நிச்சயம் எளிமையாக குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது, திருமணம் குறித்து விரைவில் அறிவிப்போம் என்று கூறியிருந்தார்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியுள்ளது. அதை முன்னிட்டு அவர்கள் இருவரும் பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் திருப்பதி சென்று திரும்பிய அவர்கள், திருமண தேதியை முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் ஜூன் மாதம் திருப்பதியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறவுள்ளது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version