பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய்சேதுபதி!

‘மாநகரம்’ படத்தின் பாலிவுட் ரீமேக் மூலம் இந்தியிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி.

கடந்த 2017ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘மாநகரம்’. இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது என்ற அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்தது.

READ MORE- LIVE: ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீடு! #EeswaranAudioLaunch

மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இது இவரது பாலிவுட்டில் நடிகராக அறிமுகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘மாநகரம்’ படத்தின் ரீமேக் என ‘மும்பைக்கார்’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்திருந்தது.

விக்ராந்த், சஞ்சய் மிஷ்ரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இதில் விஜய் சேதுபதி என்ன ரோலில் நடிக்கிறார் என்பது தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழில் ‘மாநகரம்’ படத்தில் முனீஷ்காந்த் கதாப்பாத்திரத்தில் அதாவது பாலிவுட்டில் காமெடியனாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version