விஜய் சேதுபதியின் சொந்த ஊரான இராஜபாளையத்தில் கேபிள்டிவியில் ஒளிப்பரப்பாகி பரப்பினை ஏற்படுத்தியுள்ளது க/பெ ரணசிங்கம் திரைப்படம்.

கொரோனாவின் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்படாத காரணத்தினால் பல்வேறு புதிய திரைப்படங்கள் அனைத்தும் ஆன்லைனின் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வரிசையில் நேற்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் க/பெ ரணசிங்கம் திரைப்படம் நேற்று இணையதளத்தில் வெளியானது.
குடும்ப சூழலின் காரணமாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோரின் குடும்பம் மற்றும் அவர்கள் படும் துயரம் போன்றவற்றை அழகாக வடிவமைத்துள்ள படம் தான் க/பெ ரணசிங்கம். அதோடு நம்முடைய அரசு ஏழை மக்கள் மறறும் பணக்காரர்களை எவ்வாறு பாகுபாடு பார்க்கிறது என்பதை தெளிவாகவும் இப்படத்தின் வாயிலாக காட்டியுள்ளதால் இப்படம் இணையதளத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்நிலையில் தான் விஜய் சேதுபதியின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், க/பெ ரணசிங்கம் திரைப்படம் கேபிள்டிவியில் ஒளிப்பரப்பட்டுள்ளது. இதனையறிந்த இத்திரைப்படத்தின் இயக்குநர் விருமாண்டி அளித்த புகாரின் பேரில் கேபிள் டிவி உரிமையாளர் திருப்பதியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.