பெங்களூரு விமான நிலையத்தில் அடையாளம் தெரியதாக நபரால் நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வீடியோ காட்சிகள் வெளியானது.
இந்நிலையில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவரின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் கூறியுள்ள போலீசார் இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றிருந்த நடிகர் விஜய் சேதிபதியை விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
ஆனால் அந்த காட்சியை நேரில் கண்ட சிலரோ விஜய் சேதுபதி மற்றும் அவரது நண்பர்கள் அதிக போதையில் இருந்ததால் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் வழியிலேயே விமானப் பயணத்தின் போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் விமான நிலையத்தில் இறங்கி நடந்து வரும் போது மோதிக் கொண்ட தாகவும் தெரிவிக்கிறார்கள் விஜய் சேதுபதியின் நண்பர் என்பதாலேயே தாக்குதல் நடத்திய அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.