’’விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்…’’ அடையாளம் காணபட்ட நபரைப் பிடிக்க தனிப்படை…

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்ய இலங்கை செல்லவுள்ள தனிப்படை போலீஸார்.

முத்தையா முரளிதனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 –ல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தமிழ் அமைப்புகள், நடிகர்கள்,நடிகைகள், இயக்குநர்கள், வேண்டுகோள் விடுத்தனர்.

நாளுக்கு நாள் எதிர்ப்புகள் வலுத்து வந்ததால் முத்தையா முரளிதன் இப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய்சேதுபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், விஜய் சேபதி நன்றி வணக்கம் என்று இப்படத்திலுருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஒருநபர்  அநாகரிகமான முறையில் விஜய் சேதுபதியின்  டுவிட்டர் பக்கத்தில் அவரது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தார்.

இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் சைபர் கிரைம்போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், நேற்று அந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது, இண்டர்போல் உதவியுடன் தமிழக தனிப்படை போலிஸார் அவரைக் கைது செய்ய விரைவில் இலங்கை செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

Exit mobile version