தமிழ் ராக்கர்ஸில் வெளியான விஜய் சேதுபதியின் க /பெ. ரணசிங்கம்

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க /பெ. ரணசிங்கம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் லீக் ஆகி உள்ளது.

திரையரங்குகளில் திரைப்படம் ரிலீஸ் ஆனாலே ஒரே நாளில் அது க்ளியர் பிரிண்டாக தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்படும். இதில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியானால் கேட்கவா வேண்டும் இவர்களுக்கு.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/ பெ. ரணசிங்கம் இன்று மதியம் பன்னிரெண்டு மணியளவில் ஓடிடியில் வெளியானது. அதிலிருந்து சரியாக இரண்டு மணி நேரத்தில் அதாவது மதியம் இரண்டு மணியளவில் தமிழ் ராக்கர்ஸில் இந்த முழு திரைப்படமும் லீக் ஆகியுள்ளது.

திரையரங்குகள் மட்டுமல்லாது தற்போது ஓடிடியில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கும் இந்த நிலைமை வந்து விட்டது. ஆனால் தியேட்டர் திரைப்படங்கள் லீக் ஆனால் தயாரிப்பாளருக்கும் திரையரங்கு உரிமையாளர்களும் பாதிக்கப்படுவார்கள், ஓடிடி திரைப்படங்களை பொறுத்த வரை இது யாருக்கு நஷ்டம் எனத் தெரியவில்லை.

தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்களின் விலையையும் உணவுப் பொருள்களின் விலையையும் தமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்கு சாக்காக கூறும் நாம், குறைந்த செலவே ஆகும் ஓடிடி தள திரைப்படங்களை தமிழ் ராக்கர்ஸில் பார்ப்பதற்கு என்ன சாக்கு சொல்ல போகிறோம்? பிறரின் உழைப்பத் திருடுவதற்கு கலை ரசிகர்களாகிய நாம் துணை நிற்க வேண்டாம்.

Exit mobile version