”பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படம்”…. விஜய் சேதுபதிக்கு அழைப்பு

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்கப்படும் நிலையில் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அனைத்துனைன் மீடியாக்களிலும் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டவிஷயம் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் வேண்டுகொளை ஏற்று அவரது  வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற படத்திலிருந்து  விலகினார்.

இதற்குப் பலரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்  மறைந்த விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை பிரபல இயக்குநர் ஏ,.எம்.ஆர். ரமேஷ் என்பவர்  இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதிக்கு அசர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இப்படம் குறித்த பேச்சு வார்த்தைகளும் நடந்துகொண்டுள்ளதால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்தச் செய்தியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும்,. ஏ.எ.ஆர்.ரமேஷ் ஏற்கனவே வீரப்பன்,  மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version