பிக்பாஸ் அனைத்து சீசன்களிலும் நீதிமன்ற விவாதம் போல் புகார்கள் விசாரிக்கப்படும்.
ஆனால் மற்ற சீசன்களில் இந்த விவாதம் கொஞ்சம் லேட்டாகவே ஆரம்பிக்கும். இந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே வந்து விட்டது, அந்த அளவுக்கு இந்த சீசன் சர்ச்சைகளுக்கு பேர் போகி விட்டது என்று சொல்லலாம்.
இந்த டாஸ்கில் பாலா, சுரேஷ் இருவரும் சனம் ஷெட்டிக்கு எதிராக புகார்கள் கொடுக்கின்றன. சனம் ஷெட்டி பாலாக்கு எதிராக புகார் கொடுக்கிறார், சம்யுக்தா ஆரிக்கு எதிராக புகார் கொடுக்கிறார். சம்யுக்தா எப்படியும் நேற்று ஆரியுடன் நடந்த கருத்து மோதலை மனதில் கொண்டே புகார் கொடுத்திருப்பார் என நினைக்க தோன்றுகிறது.
பாலா, சனம் இருவருமே மாடலிங் துறையில் இருப்பதால் ஆரம்ப நாட்களில் இவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு தான் இருந்து வந்தது. ஒரு நாள் சனம் ஷெட்டி சார்ந்த பியூட்டி பேஜண்டை பற்றி பாலா தவறாக விமர்சித்ததால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பித்தது. அது அவ்வப்போது ஒரு ஒரு காரணங்களுக்காக வெடித்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று முந்தைய நாள் இரவு சனம் ஷெட்டி பாலாவின் பின் பக்கத்தில் எட்டி உதைப்பது போல் காட்சி ஒன்று வெளியானது. இதற்காக நேற்று இருவருக்குள்ளும் மிக பெரிய சண்டையே நடந்தது. இந்நிலையில் நேற்றைய பிரச்சினை மீண்டும் இன்று இந்த டாஸ்க்கின் மூலம் பற்றிக்கொள்கிறது.
இந்த டாஸ்கில் வைல்டு கார்டு எண்ட்ரியான சுசித்ரா நடுவராக இருக்கிறார்.