அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம்தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இணைந்து தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் லிரிக்கல் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது தொடர்ந்து டீசரும் வெளியானது. இப்படத்தின் புதிய அப்டேட் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் பிரபுவின் “பாயும் ஒளி நீ எனக்கு”
-
By mukesh
Related Content
கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா?
By
daniel
November 27, 2024
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024
GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?
By
daniel
August 8, 2024