தமிழ் சினிமாவில் ஒரு ஜோடி பல படங்களில் நடித்தால் அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வெளி வருவது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் விஷால் மற்றும் லட்சுமிமேனன் தொடர்ந்து சில படங்களில் நடித்தபோது இவர்களை பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்தன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த கிசுகிசுக்கள் எல்லாமே உண்மை என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் காதலித்தார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
விஷால், லட்சுமி மேனன் இதுவரை பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர், லட்சுமி மேனன் நடிக்க ஆரம்பித்த சில படங்களிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ஆனால் திடீரென அவர் தமிழ் சினிமாவை விட்டு விலகுவதற்கு விஷால் தான் காரணம் என பல செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் அதற்கான விடையை தெரிவித்துள்ளார்.
விஷாலுடன் என்னை கிசுகிசுக்கப்பட்டது உண்மைதான் எனவும், ஆனால் சிறிது காலம் நானே சினிமாவை விட்டு விலகி படிப்புகளில் கவனம் செலுத்தலாம் என இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விஷால் திருமணம் பற்றி லட்சுமிமேனனிடம் கேட்டபோது, நானில்லாமல் விஷாலின் திருமணமா என்று கூறியுள்ளாராம்.சமீபத்தில் ஒரு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் செய்த விஷால் திடீரென கல்யாணத்தை நிறுத்தியதற்கு லட்சுமி மேனன் தான் காரணமா என பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுகின்றன.