விஷால், வரலட்சுமி, அஞ்சலி கூட்டணியில் உருவான மதகஜராஜா… 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ்

விஷால் நடிப்பில் உருவாகி 7 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படம் தற்போது ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2013-ம் ஆண்டு விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவானது ‘மத கஜ ராஜா’ திரைப்படம். இந்தப் படத்தில் வரலட்சுமி மற்றும் அஞ்சலி என இருவர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தை ஜெமினி ஃபில்ம் சர்க்யூட்டின் மனோகர் பிரசாத் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் படம் உருவாகி 8 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

இதற்கிடையில் சுந்தர் சி, விஷால் கூட்டணி ஆம்பள, ஆக்ஷன் என இரு படங்களில் இணைந்து பணியாற்றினர். விஷால் தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து துப்பறிவாளன் 2 படத்திலும் நடிக்கவுள்ளார்.

தற்போது மதகஜராஜா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 8 வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் என்பதால் மக்களிடம் எந்தளவிற்கு ஆதரவு கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version