யோகிக்கு அடித்த யோகம்- மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படம்

மணிரத்னம் இயக்கத்தில் யோகிபாபு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா ஊரடங்கின் போது  திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாகின.  சில முன்னணி இயக்குநர்கள் இந்தப்படங்களை இயக்கினர். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், சுஹாசினி இணைந்து ‘புத்தம் புதுக்காலை’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கியிருந்தனர். இதன் பின் வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து பாவக்கதைகள் படத்தை இயக்கி இருந்தார்கள்.


இந்நிலையில்  ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை தயாரிக்கிறார் மணிரத்னம். இயக்குநர் ஜெயேந்திராவும் இணைந்து தயாரித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், உள்ளிட்டோர் ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணிபுரிகிறார்கள். இதன் ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள். மேலும், அரவிந்த் சுவாமி, பிஜாய் நம்பியார், கெளதம் வாசுதேவ் மேனன், ஹலிதா ஷமீம், கே.வி. ஆனந்த், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், பொன்ராம், ரதிந்திரன் ஆர்.பிரசாத் ஆகியோர் இயக்குவதாக் அறிவிக்கப்பட்டது. தற்போது இதில் சின்னதொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version