சமந்தா குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள்… தெலுங்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாக சைதன்யாவுடன் தனது திருமண முறிவு குறித்து அறிவித்தார் நடிகை சமந்தா. ஆனால், அதன்பின் தன்னை பற்றியும் தனது கணவருடனான விவாகரத்து குறித்தும் அவதூறு பரப்பும் விதமாக செய்திகள் வெளியிட்டதாக சில யூடியூப் சேனல்கள் மீது போலீஸில் புகார் அளித்ததுடன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் நடிகை சமந்தா தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்குத் திரையுலக நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடைபெற்று இதில் நடிகர் விஷ்ணு மஞ்சு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ள விஷ்ணு மஞ்சு, சமந்தா விவாகரத்து தொடர்பாக தொடர்ந்து தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்று தெலுங்கு யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

தெலுங்கில் திரையுலகம் சம்பந்தப்பட்ட செய்திகளைத் தங்கள் இஷ்டப்படி பத்திரிகைகள் வெளியிட்டுவிட முடியாது. முடிந்தவரை சர்ச்சைக்குரிய செய்திகளைத் தவிர்த்து விடுவார்கள்.

இதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் நேரடியாகத் தொடர்புகொள்கிற அளவு முன்னணி நடிகர் நடிகைகள் அவர்களுடன் நல் உறவில் இருப்பதால்தான்.

இந்த அளவுக்குக் கட்டுக்கோப்பாக இருக்கும் சூழ்நிலையில் சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து விவகாரத்தில் வரம்பு மீறி செய்திகள் வந்து கொண்டிருப்பதை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் திரைத்துறையினர் பற்றி மோசமான, இட்டுக்கட்டிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவும். அதனால் இப்போதே அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என மூத்த நடிகர்கள் விஷ்ணு மஞ்சுவுக்கு அறிவுறுத்தியதால் எச்சரிக்கை விடுத்ததுடன் விரைவில் யூடியூப் நிறுவன உரிமையாளர்களையும் அழைத்து தங்கள் சட்ட ஆலோசனை குழுவுடன் சேர்ந்து இதுகுறித்த கலந்துரையாடல் ஒன்றையும் நடத்த விஷ்ணு மஞ்சு முடிவெடுத்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version