ஒடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம்..தேதி தெரியுமா?..

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள, க/பெ. ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள க/பெ. ரணசிங்கம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு, அனல் பறக்கும் வசனங்கள் இடம்பெற்று இருந்த இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவதும், ஆதார் கார்ட் போன்றவை தொடர்பாக சாமானியன் கேள்விகளை எழுப்புவது போன்ற காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன. இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்

க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாது என இப்படத்தின் இயக்குநர் விருமாண்டி முதலில் பேட்டியளித்தார். ஆனால், தற்போதைய நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதற்கான பதில் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

ஏற்கனவே, இந்த படத்திற்கான இரு நாள் படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ளது. டப்பிங், ரெக்கார்டிங் பணிகளும் மீதமுள்ளன. டீசரை வெளியிட்டதற்குக் காரணம், படம் முடியும் தறுவாயில் உள்ளது என்கிற தகவலை வெளியிடுவதற்காகத்தான் என்று கடந்த ஜூன் மாதம் படத்தின் இயக்குனர் பேட்டியளித்தார்.

இந்நிலையில் க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை குறிப்பிட்ட தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு, கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.

Exit mobile version