ஆதலால் காதல்…

ஒருவரை ஒருவர்…

கடிந்து கொள்கிறார்கள்.

அவரவர் ஆதங்கத்தை

அடுத்தவர் மீது

திணித்துக் கொள்கின்றனர்.

சில நேரங்களில் …

கை கலப்பும் நடந்தேறுகிறது.

விடுபட்ட வார்த்தைகளோ…

அடுக்கப்பட்டு, அடுக்கு மாடி வீடே

கட்டி விடுகின்றன.

இதெல்லாம்

அப்படியே இருக்க…

அவர்கள் இல்லாத நேரங்களில்…

பரிமாறிக் கொண்ட செயல்களும்,

பிரியத்தின் வார்த்தைகளும்,

விழிகளின் மௌனமும்,

விளையாடிய சில்மிஷங்களும்,

ஏனோ பொத்துக்கொண்டு

கண்ணீரில் , காதலாய்

கரை புரண்டோடுகிறது.

ஆதலால்…

வழியும் விழிநீரை, துடைத்து விட்டு

காதல் செய்வீர்.

– ச சிவகாமி

Exit mobile version