வெயிலோடு மல்லுக்கட்டி – பீஷ்மா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 156 வெயிலோடு மல்லுக்கட்டி – பீஷ்மா

வெயிலின் வீச்சத்தில் வேக வேகமாய் வியர்வையின் நனையலில் ஆற்றாமையோடு நடந்து கொண்டிருந்தார் ஜோசப் ஜெயராஜ் என்னும் அண்ணாச்சி…,

” என்ன அண்ணாச்சி! இன்னிக்கு கடைய லீவ் விட்டுட்டியளோ? ” வழியில் கருப்பசாமி மறித்துக் கேட்டார்…,

” ஆமா அண்ணாச்சி, அந்த சிறுக்கி என்னய கோர்ட்டுக்கு இழுத்து அலைய விடறா, இருக்கற மளிகைக் கடையையும் 

அவ பேருக்கு மாத்தி விட்டுட்டு என்னய வெளிய போகச் சொல்றா ” கண்கள் கண்ணீரை வியர்வையோடு வழிய விட்டது…,

பதறிப் போன கருப்பசாமி,

” என்னவே, அக்ரமமா இருக்கு. அந்தக் கடைய வளத்து விட்டதே நீர்தானே “…,

ஜோசப் ஜெயராஜ் சிறு வயதிலேயே மளிகைக்கடையில் அவரது தகப்பனால் விடப்பட்டவர்…,

மளிகைக் கடையையும், தனது அனைத்து சொத்துக்களையும், ஒரு பெரிய வீட்டையும் ஜோசப் ஜெயராஜோடு சேர்த்து தனது மைத்துனனும், ஜோசப் ஜெயராஜின் தாய் மாமனுமான ஞானராஜிடம் ஒப்படைத்து காசிக்கு ரயிலேறியவர் தான்…, இது நாள் வரை திரும்ப வில்லை…,

ஜோசப் ஜெயராஜின் சொந்தத் தாய் மாமன்,  ஜோசப் ஜெயராஜைத் தன் சகோதரி மகனென்று யாரிடமும், ஏன் தன் சொந்தப் பெண்ணிடம் கூடக் காட்டிக் கொள்ளாமல், ஒரு வேலையாள் போலத் தான் நடத்தி வந்தார்…,

அவரே அப்படியென்றால்.. அவர் மனைவி தன்னை மாமியென்று ஒரு நாளும் காட்டிக் கொண்டதில்லை…,

அவர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு வேலையாள்…, அவ்வளவே!…,

மளிகைக் கடையின் அனைத்து சூட்சுமங்களையும் கற்றுக்கொண்டு ஒரு கட்டத்தில் மளிகைக்கடையின் முழுப்பொறுப்பையும் தாங்கி நிற்கும் ஜோசப் ஜெயராஜ் இப்போது வளர்ந்து வாலிபனாகத் தன் முன் நிற்கும் போது…,

அனைத்து சொத்துக்களின் சட்டபூர்வ வாரிசான அவனால் சொத்துக்களில் முக்கியமாக வாழ்வாதாரமான மளிகைக் கடைக்கு சட்ட சிக்கல் ஏதும் வந்து சொத்து கை நழுவிப் போகாமலிருக்க தன் மனைவியுடன் சேர்ந்து ஆலோசித்து ஒரு பெரிய முடிவெடுத்தார்…,

அவன் தனது சகோதரி மகன், தன் பெண்ணுக்கு அத்தை மகன் உறவு என்பதைச் சொல்லாமல் தன் மகளுக்கு அவனைத் தன் மகளின் விருப்பம், எதிர்ப்பு அனைத்தையும் மீறி மாப்பிள்ளையாக்கினார்…,

ஊர் மக்களுக்கும், மற்றவர்களுக்கும் மளிகைக் கடை உரிமையாளருக்கு மிகச் சுளுவில் கிடைத்த ஒரு மாப்பிள்ளையாகத் தோன்றி ஞானராஜின் ஒரே பெண்ணுக்கு ஜோசப் ஜெயராஜ் கணவனானார்…, 

கடையிலும் வீட்டிலும் எல்லாவித எடுபிடி வேலைகளையும் செய்து, நித்தமும் காலையிலும், ராத்திரியிலும் கடையைக் கூட்டிப் பெருக்கி அந்த மளிகைக் கடையிலேயே படுத்துறங்கி வாழ்ந்து வந்த அவருக்கும் முதலாளி பெண்ணுக்கும் கொஞ்சமும் பொருந்தவில்லை…,

சின்ன வயதிலேயே காரில் பள்ளிக் கூடத்துக்குப் போய் கல்லூரிப் படிப்பையும் முடித்த வாணி தன் கூடப் படித்த தோழிகளெல்லாம் தங்களுக்கு மேல் படித்த நவ நாகரீக கணவர்களுடன் டாம்பீக வாழ்க்கை வாழும்போது தனக்கு மட்டும் ஏன் இந்த வேலைக்கார கணவன் என்று மருகிக் கொண்டே அப்பாவின் ஆணைக்கிணங்கி மனமுடைந்து மணம் செய்து கொண்டாள்…,

மளிகைக் கடையின் முதலாளியான ஜோசப் ஜெயராஜின் மாமன் தன் பெண்ணும், அக்கா சொத்துக்களும் தங்களை விட்டு எங்கும் போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில்..,ஜோசப் ஜெயராஜ் யாரென்ற உண்மையைத் தன் பெண்ணிடத்தில் சொல்லாமல் அவர்கள் இருவரின் வாழ்க்கையில் அவரறியாமலேயே வெயிலையும்.. வெப்பத்தையும் சேர்த்து விட்டார்…,

அந்த வெயிலோடு மல்லுக் கட்டி மூச்சு முட்டிப் போனது ஜோசப் ஜெயராஜ் அண்ணாச்சிக்கு…,

” என் வாழ்க்கைய அழிச்ச உன்ன ஒரு நாளும் என் புருஷனா ஏத்துக்கிட முடியாது. எங்கப்பா முன்னாடி நடிச்சு எங்க சொத்தை ஆட்டையப் போட என்னக் கல்யாணம் பண்ணிக்கிட்ட இல்ல, உன்ன இந்தக் குடும்பத் திலர்ந்து ஓட ஓட விரட்டறதுதான் இனிமே என் ஜோலி ” என்று சபதமாகவே சொன்னாள் வாணி…,

மாமனார் இறந்ததும்…, வாணியின் ஆட்டமும், தொல்லையும் அதிகமாகிப் போக கடையிலேயே தங்கிக் கொண்டார் அண்ணாச்சி…,

திடீரென்று ஒரு நாள் அவருக்கு விவாகரத்துக்கான நோட்டீஸ் வந்தது…, 

அவள் பெயரில் உள்ள சொத்துக் களை விற்று இந்த மளிகைக் கடையையும் விற்பதற்கு ஏற்பாடு பண்ணி அவரையும் தன் வாழ்விலிருந்து விலக்கி விட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்த அவளிடம் மளிகைக் கடைக்காக மட்டும் போராடிக் கொண்டி ருக்கிறார் ஜோசப் ஜெயராஜ் அண்ணாச்சி…,

வெயிலோடு மல்லுக் கட்டும் அண்ணாச்சி மளிகைக் கடையை மட்டுமாவது தன்னோடு தக்க வைத்துக் கொள்வாரா!?…,

வெயிலில் விசும்பியபடி தன் குல தெய்வம் அய்யனாரை மனமுருகிப் பிரார்த்தித்த அண்ணாச்சி எதிரில் வேகமாய் வந்த லாரியைக் கடைசி வினாடியில் கவனித்து விலக முயற்சிப்பதற்குள் லாரியில் அடிபட்டு ஆகாயத்தில் பறந்தார்…,

அந்த நொடி அவர் கண்ணில் பட்டது அந்த லாரியின் முகப்பில் எழுதியிருந்த அந்த வாசகம்…,

” அய்யனார் துணை “…,

           அத்தியாயம்  02…,

வாணியின் முகத்தில் ஒரு குருரத்

” திருப்தி “யுடன் புன்னகை மலர்ந்தது…,

அண்ணாச்சி லாரியில் அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணப் பட்ட தகவல் வந்ததிலிருந்து ஜோசப் ஜெயராஜ் அண்ணாச்சி என்னும் தனது கணவனைப் பழி வாங்கும் உணர்ச்சி திருப்திப் படுத்தப்பட்டு ஒரு விதமான குரூர மகிழ்ச்சியில் இருந்தாள்…,

வாணியின் தாய் மட்டும் கொஞ்சம் பதறிப் போய், ” வாணி, நீ செய்யறது ஒண்ணும் சரியில்லைடி.., பொறுமையாப் போற ஒம்புருஷன இப்படி வாட்டி வதைக்கறது கொஞ்சம் கூட நல்லால்ல.. வா.. போய் ஹாஸ்பிடல்ல அவரப் பாத்துட்டு வரலாம் “…,

” ஹாஸ்பிடலுக்கா.?.., அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல.., நீ சும்மா   இரு “…,

” தப்பு வாணி நீ செய்யறது… இவ்ளோ வன்மம் ஒருத்தர் மேல இருக்கக் கூடாது..நீ வரலேன்னா என்ன நான் போய்ப் பார்க்கத்தான் போறேன் “…,

” என்ன மீறி ஒரு அடி எடுத்து வச்சேன்னா.. நான் ராட்சஷியா மாறிடுவேன் “…,

” ம்ம்க்கும்.., இப்ப மட்டும்!? “…,

அப்போது அங்கு வந்த குடும்ப நண்பர் கருப்பசாமி, ” என்னம்மா வாணி, நீ செய்யறது ஒன்னும் சரியில்லையே! அந்த அப்பாவி ஜெயராஜை ஏன் இப்படிப் போட்டு வதைக்கிற? ” என்று கொஞ்சம் கோபத்துடன் கூறினார்…,

” என்னது! நான் வதைக்கிறனா? என்னோட படிப்புக்கும், அந்தஸ்துக்கும் அந்த ஆளு எனக்கு எப்படி சமமாவான்? கிளியைப் போல என்ன வளர்த்து தன் கிட்ட வேலை செய்யற அந்த ஆளுக்குக் கட்டிக் கொடுத்த எங்கய்யனை எதுக்க முடியாம நான் ஒத்துகிட்டேனே தவிர ஏத்துக்கலையே “…,

” நீ ஏத்துக்காமப் போனதுக்கு உன் புருஷன் என்னம்மா பண்ண முடியும்.

உங்கய்யன் உனக்கு நல்லது மட்டுமே பண்ணுவார்னு உனக்கு நம்பிக்கை இருந்தா நீ இந்த மாதிரியெல்லாம் பண்ணுவியா!?…,

உங்க அய்யன் வார்த்தையை வேத வாக்கா மதிச்சுத் தான் உன்ன ஜெயராஜ் கட்டிக்கிட்டானே தவிர உன் சொத்துக்கு ஆசைப்பட்டு இல்லம்மா.., உன்னயும் உன் சொத்தையும் காப்பாத்தி நல்லா வாழ வைப்பான்னு உங்க அய்யனோட நம்பிக்கையை மதிச்சுதாம்மா! “…,

” என்னக் காப்பாத்திக்கவும், என் சொத்தைக் காப்பாத்திக்கவும் எனக்குத் தெரியாதா மாமா? “

” உன்கிட்ட இப்ப வேற வழி யில்லாம ஒரு ரகசியத்தை சொல்றேன் கேட்டுக்க.., என் சொத்து, என் சொத்துங்கிறயே, அது மொத்தமும் உன் புருஷனுக்குச் சேர வேண்டிய சொத்துன்னு உனக்குத்

தெரியுமா? “…,

அதிர்ந்தாள் வாணி. ” என்ன புதுசா கத சொல்றீங்க!? “…,

” கதையில்லம்மா! நிஜம்.., ஜெயராஜ் உன்னோட அத்தை பையன் தான்…,

சின்ன வயசில ஜெயராஜையும் மளிகைக் கடை உள்பட எல்லா சொத்துக்களையும் உங்கய்யன் கிட்ட ஒப்படைச்சுட்டு உங்கத்தை செத்துப்போன துக்கத்துல தேசாந்திரம் போயிட்டார் ஜெயராஜோட அய்யன்.

இந்த உண்மை தெரிஞ்சும் இன்னைக்கு வரை அந்த உரிமையை உன்கிட்ட சொல்லாம போராடிக்கிட்டு இருக்கான்மா உன் புருஷன்…,

இந்த உண்மையத் தெரிஞ்ச உங்கம்மா கிட்டப் போய்க் கேட்டுப் பாரு…, அவன் நெனச்சா நீயும், உங்கம்மாவும் இன்னிக்கே நடுத்தெரு தான்…,

இப்பக் கூட உன்னையும், கடையயும் விட்டுப் போக முடியாம உயிர விடவும் துணிஞ்சு விரக்தியில் ஹாஸ்பிடலில் இப்பவோ, எப்பவோன்னு கிடக்கான். நீ சந்தோஷமா இங்க பழி வாங்கிட்டேன்ன்னு சிரிக்கிறே “…,

வாணியின் தாய், முதன் முறை கண்களில் கண்ணீரோடு, ” ஐயோ என் ராசா…, உன்னை யார்னு சொல்லாம அவர் போய்ச் சேந்துட்டாரு.. நீதான் இத்தனை சொத்துக்கும் வாரிசுன்னு தெரியாம இவ அடிச்ச கூத்தக் கண்டிச்சும் உன்ன யார்னு இவளுக்கு நா அறிமுகப் படுத்தலயே.., கருப்பசாமி அண்ணாச்சி என்ன என் மருமகன் கிட்ட கூட்டிட்டு போவீங்களா!? “…,

அதிர்ந்தாள் வாணி. ” என்ன புதுசாக் கத சொல்றீங்க!? “…,

” கதையில்லம்மா! நிஜம்.., ஜெயராஜ் உன்னோட அத்தை பையன் தான்…,

சின்ன வயசில ஜெயராஜையும் மளிகைக் கடை உள்பட எல்லா சொத்துக்களையும் உங்கய்யன் கிட்ட ஒப்படைச்சுட்டு உங்கத்தை செத்துப்போன துக்கத்துல தேசாந்திரம் போயிட்டார் ஜெயராஜோட அய்யன்.

இந்த உண்மை தெரிஞ்சும் இன்னைக்கு வரை அந்த உரிமையை உன்கிட்ட சொல்லாம போராடிக்கிட்டு இருக்கான்மா உன் புருஷன் “…,

தனது அகங்காரத்திலும், பழி உணர்ச்சியிலும்  மிகப் பெரிய கோடையிடி விழுந்த உடன் தவித்துப் போன வாணி உடனடி மன மாற்றத்தினால் ஹாஸ்பிடல் விரைந்தாள்…,

மயக்கத்திலிருந்து மெல்லக் கண் விழித்த அண்ணாச்சி, தன் எதிரில் கண்களில் கண்ணீரோடு நின்றிருப்பது தன் மனைவி வாணிதானா!?…,

என்ற குழப்பத்தில் கண்களை வலுக்கட்டாயமாய் அகலத் திறந்து பார்த்து வியந்தார்…,

” என்ன மன்னிச்சுடுவியளா!?.., உண்மை என்னன்னு தெரியாம இந்தப் பாவி உம்ம ரொம்பப் படுத்திப் புட்டன்.. உங்க பெருந்தன்மையப் புரிஞ்சுக்காம சோதிச்சுப் புட்டன் “…,

நிஜமான கண்ணீரோடு வாணியும், அவள் தாயும் விசும்பி நின்றதைப் பார்த்து ஒரு கணம் கனவா என்று திகைத்த அண்ணாச்சி…,

பக்கத்தில் கருப்பசாமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஒரு வாறு யூகித்துக் கொண்டார்…,

” உண்மையெல்லாம் தெரிஞ்சு போச்சு அண்ணாச்சி…, அதான் வாணி இப்ப இங்கன வந்துருக்கு.., இத எப்பவோ உங்க மாமனும், மாமியும் அது கிட்ட சொல்லியிருக்கலாம்.. மமதையா.. சொல்லாம அந்த மனுஷன் போய்ச் சேந்துட்டாரு.. உங்க மாமியும் இத்தனை நாளா சொல்லாம குரோதம் வளர்றதுக்கு முக்கிய காரணமா இருந்துருக்கு “…,

” ஐயா.. என்ன மன்னிச்சுடுய்யா.., இந்தப் பாவி வாயத் திறக்காம இத்தனை நாளா இருந்துட்டேன்…, இனிமே ஊருக்கே தம்பட்டம் போட்டுச் சொல்லுதேன்… நீ என்னோட நாத்தனார் மவன் தான்னு…, வாணிக்கு முறைப் பையன் தான்னு “…,

“நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு”

தொழில் செய்கின்றவன் கோணா திருக்கும் வகையில் நாள்தோறும் அவனுடைய நிலைமைக்கு நன்மை செய்தல் வேண்டும்…,

“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு”

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யும் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்..,

Exit mobile version