பெண் என்னும் பேதைமை-  சு. சாந்தி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 196 பெண் என்னும் பேதைமை-  சு. சாந்தி

                  

    ‘ பண்ணாரி மாரியம்மன் வேப்பிலை காரி அம்மா

ஏன்டி என் வேதனை தீர்க்கல’

 என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது மனசுக்குள்ளே ஆயிரம் நனவோடைகள் ஓடிக்கொண்டிருந்தது. நமக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? எண்ணியவளாக பயணிக்கிறாள் கீர்த்தி.

  அம்மா எனக்கு சாப்பிட வேண்டும்”

  என்ன பாரி வேண்டும், இத பிஸ்கெட் சாப்பிடுப்பா’

பிஸ்கட்டை எடுத்து நீட்டினாள் கீர்த்தி.

‘ இல்லை எனக்கு ஆப்பிள் தான் வேணும்’

 எவ்வளவு சொல்லியும் குழந்தை அடங்கவில்லை. மேன்மேலும் அழுது கொண்டே இருந்தது.

‘மலையனூர் கோவிலுக்கு செல்லும் வழியில் வாங்கிக் கொள்ளலாம்’

என்றாலும் ஒரே அழுகை    ‘ம்ம்… என்ன சொல்லு கிருத்தி ”மாமா தம்பிக்கு ஆப்பிள் வேண்டுமா என்று ஒரே அடம்பிடித்துக் கொண்டிருக்கிறான்’      ‘சரி நீ கால் கட் பண்ணு நான் டிரைவரிடம் பேசுகிறேன்’

“பாத மாறுலடீ பாய் எடுத்து போடலடி

 பத்தினியைப் பதற வைத்த

சாமி சன்னதிக்கு சத்தியமா சேர வந்த பூவே ஒன்றை கருகவிட்ட”

 என்ற பாடல் வழியை கேட்ட பொழுது கீர்த்திகையே அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பிறர் அறியாதவாறு கண்ணீரை துடைத்துக் கொண்டவள், மேலும் இறைவனை நம்பி பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

“ஏய் …. ஊஊஊ  …. ஏய் … ஊஊஊ…”

ஆத்தா வந்திருக்கேன். திடீரென்று அருகில் இருந்த பெண்ணின் முடியை பிடித்து முடி போட்டாங்க சாமி வந்து அம்மா.   மனது நம்பியும் நம்பாமலும் தான் இருக்கும் போலும். உண்மையிலே சாமிதான் வந்திருக்குமோ முன்பின்னு தெரியாத ஏதோ ஒரு வேண்டுதலை வைத்துக்கொண்டு அமாவாசை அன்று மலையனூர் சென்று அம்மனை வணங்கினால் கஷ்டம் அனைத்தும் தீரும் என்பது அந்த பயணத்தின் அர்த்தம்.    திடீர் திடீரென்று சாமி வருவதும்

“ஏன்டி அம்மா சோகமா ஒக்காந்து இருக்க எழுந்து வா அடி கண்டிப்பா உனக்கு ஆம்பள புள்ள தாண்டி பொறக்கும் துர்கா”

 என்று வாக்கு சொன்னது.

” என் மனதுக்குள் ஒரே சந்தோசம் ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள் இது நான்காவது குழந்தை வயிற்றில் உள்ளது”

மூட பழக்கமுமோ? வாரிசு போராட்டமோ? ஆனால் இந்த இருபத்தியோராம்  நூற்றாண்டில் ஆண் வாரிசுக்குரிய மோகம் குறையவே இல்லை.

      துர்காவுக்கு எப்படி ஒரு ஆண் பிள்ளை பிறந்த போதும் என்று துர்காவை நினைத்து மனசு கரிசனப்பட்டது.

     அடுத்தவரை நினைத்து சந்தோஷப்படும் மனதிற்குள்ளே  மீண்டும் தான் கவலைகள் பற்றிக் கொள்கிறது.

” சீதை தீக்குளித்து இராமனைதான் நம்ப வைத்தா

 இராமாயணம சொன்ன செய்திதான்

கோபம் கொண்டு எழுந்து

கண்ணகிதான் ஊர் எரித்தால்

 நானும் கூட அந்த ஜாதி”

  பாடல் வரி கேட்டவுடன் நானும் சீதையாகவோ  கண்ணகியாகவோ தானே இருக்கிறேன். அப்படி இருந்தும் “தேவிடியா……..” என்ற சொற்களின் மாலை மட்டும்  ஏன் பெண் மீது விழுகிறது . நெஞ்சம் மயங்கி வயிற்றில் ஒரு அலை உருவாகி உயிரைக் கொன்றது போல இருந்தது.

       தீயில் இறங்கி வந்ததும், தீயிக்கு ஒரு நகரத்தை இரையாக்கியதும் புராணம் சொல்லும்  பத்தினி பெண்கள். இன்றைய பத்தினிப் பெண்டிர்  எம். ஏ , எம்ஃபில் … படித்திருந்தாலும் என்ன? தானும் பத்தினி என்று நிரூபிக்க முடியாத வெப்ப கனலில் கண்ணீரில் மிதப்பது தான் உண்மை.

       பெண்ணிற்கு மன உறுதி வைத்த ஆண்டவன் பெண்ணின் கண்ணுக்குள்ளே வற்றாத நதியை வைத்துவிட்டான் போல,  பேருந்து வேகம் கூடிக் கொண்டே போனது. வேகம் ஒரு நிதானத்தை கொடுத்தது வேகமாக அம்மனை சென்று பார்த்தால் தன் பிரச்சனையெல்லாம் தீர்ந்து விடாதோ???

“தேவிடியா முண்ட,  உங்க அப்பன் வீட்டிலிருந்து கொண்டு வந்து போட்டியா சோறு போடுடி”

      “சோறு போட மாட்டியா? ஏன் வேறு யாராவது பாத்திட்டியா?”

 “நானும் மனுஷிதா காலேஜுக்கு போறேன் அங்கு 100 200 பிள்ளைகளோடு ஓரியாடிட்டு வீட்டுக்கு வந்தா துவைக்கணும்  கழுவனும், சமைக்கணும், பிள்ளைகளை பார்க்கணும் . இவ்வளவு வேலை இருக்கு பொழுதெல்லாம் உழைத்து வந்தால் இரவில் ஒரு நாளாவது இரவு பத்து மணிக்கு எல்லாம் தூங்க முடியுதா எப்பபாரு பதினொரு மணி பன்னிரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து ஏன் இப்படி உயிரை வாங்குறீங்க?”

      கண்ணுமண்ணு தெரியாமல் விழும் அடி… அடி வாங்கியப் பின் அடி வாங்கிய கையால் தட்டில் விழும் சோறு. நினைத்துப் பார்த்தால் கண்ணீர் மீண்டும் ஆறாகப் பெருகெடுத்து ஓடும்.

       முழுமையான இரவு பொழுது அடர்ந்த காரியங்களில் பேருந்து நின்றது.

“பையன் தூங்கிட்டானா?”

‘ ஆமா அம்மா”

‘சரி நான் அவனே பஸ்ஸில் பார்த்துக் கொள்கிறேன் நீ போய் பரிகாரம் பண்ணிட்டு வா’

மனசு தான் குரங்கு என்று முன்னோர்கள் சொன்னது கேட்டார் போல கணக்கு போடுகிறது.

‘ இவங்க மட்டும் தூங்கிட்டானா பையன் இடையில் முழித்துக் கொண்டு எழுந்து என்னை தேடி எங்காவது  போயிட்டா என்ன செய்வது,

 இல்லை வேண்டாமா எழுந்தால் அழுவான் நானே பார்த்துக்கொள்கிறேன்’

    ‘பஸ்ஸில் சாமி வந்து தலையில் முடி போட்டவர்கள் எல்லாம் வந்து ஒரு புறம் மண்டி போடுங்கள்’ என்றார் சாமி அடியின் கணவர்.

        முடியை அவிழ்க்கும் வரை யாரும் எதையும் சாப்பிடக்கூடாது. மண்டி போட்டு காத்து கிடந்தவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து முடிப்போட்ட முடியை கத்திக்கொண்டு அறுத்து வீசப்பட்டது. உன்னை பிடித்த பேய் ஒட்டி விட்டேன்.

   ‘ அது எப்போ’

 என்று நினைப்பதற்குள்,

‘பஸ்ஸில் வேப்பிலையால் அடித்தேன் இல்ல அப்பவே போய்விட்டது இந்த அந்தரத்தை கட்டிக்கோ இனி பேய் உன்னிடம் அண்டாது’

      அந்தரம் கட்டும்முன்  500 ரூபாய் கொடு என்று சாமி கேட்குமா?

‘ சாமி மலை ஏறப்போகுது எல்லாரும் வந்து குப்புற படுங்க சாமி மேல ஏறி வந்து உங்களை பிடித்த கஷ்டங்களை எல்லாம் ஓடிப் போய்விடும் “

‘நான் வரவில்லை’

‘ ஏன் மா  இவ்வளவு தூரம் வந்துட்ட  வந்து படுமா’

 பக்கத்திலிருந்தவர்கள் இழுத்து படுக்க வைத்தார்கள்.

‘தலையை தூக்கி தூக்கி பார்த்தேன் சாமி வந்ததாக சொன்ன அம்மா தலையில் பூ கரகம் வைத்துக்கொண்டு நல்ல குண்டு கொலுப்புமாக இருந்தவங்க ஏறி மிதித்து கொண்டு வந்தாங்க.

          பரிகாரம் பண்ண சொன்னவங்க எல்லாம் வாங்க பரிகார பொருட்களை எடுத்துட்டு வாங்க அரிசிமாவினால் வட்டம் மூன்று முட்டை , மூன்று எலுமிச்சை, மூன்று கற்பூரம், மூன்று மூளைக்கு வையுங்கள் வைத்து தயாராக இருங்கள் ‘

       சாமியாரின் கணவர் கூறியதை கேட்டவுடன், ஒவ்வொரிடமும் 200 எடுக்கச் சொன்னார். இதென்ன பகல் கொள்ளையாக இருக்கு

‘முட்டை , கற்பூரம், எலுமிச்சை , அரிசி மாவு எல்லாம் எடுத்துக்கொண்டு வந்தது நாம இவங்களுக்கு ஏன் 200 ரூபாய் கொடுக்கணும்?’

       மனசு உடனே  கணக்குப் போட்டது, கிட்டதட்ட தாயத்துக்கு ஒரு ஆளுக்கு வீதம் 500 பரிகாரத்திற்கு 200 பஸ்சூக்கு 900 கிட்டத்தட்ட 40,000 வரைக்கும் வந்திருக்கும் இல்ல ?

வந்ததற்கான வேலையை மறந்து சாமியாடி வருமானத்தை கணக்கு போட்டது படித்த புத்தி.

      மற்றவர் எல்லாம் ஏழைகள் கூலி செய்து பிழைப்பார்கள். ஆனால் படிப்பறிவு இல்லாத பாமரர்கள் கேட்டதை ஏன்? என்ன? என்று கேள்வி கேட்காமல் கொடுக்கிறார்களே! என்று உடனே நமக்கு இது தேவையா

‘கணவர்

குடிகுடிக்காக தின அடி….’ அடிப்பதைத் தடுத்தால் வார்த்தைகளால் விழும் கெட்ட வார்த்தைகளின் அர்ச்சனை. இதுவா பெண் வாழ்க்கை இதற்காக பெண் படிக்கிறார்களா?.

         சு.சாந்தி

உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை

ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நல்லபள்ளி

தருமபுரி.

Exit mobile version