ஒரு பெண்ணின் மறு பிறப்பு- ஜெயசுதா ஜகதீசன்





செய்தி அலை சிறுகதைப் போட்டி– 197 ஒரு பெண்ணின் மறு பிறப்பு ஜெயசுதா ஜகதீசன்

அது ஒரு அழகான பச்சை பச்சை என்று பார்க்கும் இடமெல்லாம் பசுமையை காட்சி அளிக்கும் அழகான  கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான கிராமம். அங்குதான் மது வசித்து வந்தாள். இவர் வசிக்கும் ஊரில் மட்டுமே பசுமை தென்பட்டதை,தவிர மதுவின் முகத்தில் இல்லை.

 25 வயது நிரம்பிய இளம்  இல்லத்தரசி மது . மதுவுக்கு அது இரண்டாவது கர்ப்பம்.” “மதுவின் வாழ்வில் சந்தோசம் என்பது வானில் தோன்றும் வானவில் மாதிரி எப்போதாவது வந்து தோன்றும்.”

 முதல் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைக்க 8:30 மணிக்கு எல்லா வேலைகளையும் பார்த்து விட்டு பின்பு மருத்துவமனைக்கு செல்வாள் . போகும்போது அவள்  கணவருடன் மருத்துவமனைக்குச் செல்வாள் -ஆனால் திரும்பி வரும் பொழுது அவள் மட்டுமே தனியாக வருவாள்.

அவளை கவனிக்க இங்கு யாருமே இல்லை. அவள் வாழ்வில் திருமண வாழ்க்கையை தனிமையிலே செலவழித்தால். ஒருகட்டத்தில் வயிற்றிலிருக்கும் குழந்தையோடும், தன் வைத்த செடி கொடிகளுடன் பேச ஆரம்பித்தாள். முதல் குழந்தையை  அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தாள். அதனால் இப்பொழுதும் இரண்டாவது குழந்தையின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் பிரசவ நேரம் நெருங்கி விட்ட போதும் கூட ஒன்பதாம் மாதத்தில் குழந்தையின் எடை குறைவாகவே இருந்தது காரணம் மதுவிற்கு சத்தான உணவு செய்து கொடுக்க மதுவின் மாமியாருக்கு பிரியமில்லை. மேலும் மதுவை மாமியாருக்கும், நாத்தனாருக்கு பிடிக்கவே பிடிக்காது. காரணம் அது காதல் மற்றும்  இரு வீட்டு சம்மதத்துடன் நடந்த  திருமணம்.  இதனாலேயே மதுவை மாமியார் வீட்டில் பிடிக்காது. மதுவின் கணவர் நல்லவர்தான் ஆனால்                வெகுளி யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவார் தன் அன்னை மீதும் அக்கா மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால் இந்த விஷயத்தில் மதுவிற்கு சாதகமாக  எதுவும் பேசமாட்டார்.

 மதுவின் வயிறு மற்ற கர்ப்பிணி பெண்களை விட சற்று வித்தியாசமாகவே நீண்டு பெரிதாக தொங்கியபடியே காணப்பட்டது. அவளால் நீண்டநேரம்நிற்க முடியாது, அமர முடியாது, படுக்க முடியாது. படுத்து இருக்கும் போது கூட தலையணையை பக்கத்தில் அணைத்தபடியே தான் வைத்து படுக்க வேண்டும். இப்படியிருக்கையில் மதுவின் அன்னை வந்து மதுவிற்கு குழந்தை பிறக்கும் வரை கூடவே இருந்து சமைத்துக் கொடுத்தார்.

இப்போது தான் மதுவின் வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகரித்தது மேலும் ஒரு சோதனை வயிறு  தொங்கியபடியே இருப்பதால் மிகவும் சிரமம் அடைந்தாள் ஒருபக்கம் கணவரின் வீட்டில் உள்ள மாமியார் நாத்தனார் கொழுந்தனார் பிரச்சனை, மற்றொரு பக்கம் உடல்நிலை சரியில்லாத பிரச்சனை. இப்படி  உடலும் சரியில்லை மனமும சரியில்லை மதுவிற்கு. ஆனால் அவன் குழந்தை பேருக்கு  தயாராகிவிட்டாள்.

 பிரசவத்திற்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் உடல் பரிசோதனைக்காக தனது அன்னையுடன் அரசு சுகாதார மருத்துவமனைக்கு பேருந்தில் ஏறிச் சென்றாள். அங்கே காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி! ஸ்கேன் பண்ணி பார்த்தது நஞ்சுக்கொடி கீழே இறங்கி விட்டது என்றனர் ஸ்கேன் செய்த மருத்துவர் . ஏற்கனவே முதல் குழந்தைக்கு நஞ்சுக்கொடி கீழே இறங்கிய காரணத்தால் நிறைய உதிரப்போக்கு வீட்டிலேயே ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்தாள் மது.இப்போதும் நஞ்சுக்கொடி கீழே இறங்கி விட்டது என்றவுடன் மதுவிற்கு சிறிது பயம் வந்துவிட்டது. ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையை நாடினாள் மது. மதுவின் நிலையை உணர்ந்த மருத்துவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில்  அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்து விடலாம் என்று கூறினார் மருத்துவர் . சரி வீட்டிற்கு போயிட்டு  நாளை மருத்துவமனைக்கு வரேன் என்றாள் மதுவின் அன்னை.  இப்பொழுது வழி இல்லை என்றால் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று மருத்துவர் கூறினார். சரி நாளை வருகிறேன் என்றுகூறி. மதுவும்,மதுவின் அம்மாவையும் மருத்துவமனையை விட்டு கிளம்பினார்.

அப்பொழுது அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவரை மதுவிற்கு நன்றாக தெரியும். அவர் ஏன் மதுவை அழைத்துச் செல்கிறீர்கள் இன்றே மதுவை மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள் என்று கூறி மதுவை அழைத்துக்கொண்டு விண்ணப்பத்தை நிவர்த்தி செய்து மருத்துவமனையில் சேர்த்து விட்டார் அந்த ஊழியர். அதற்கு மதுவின் அன்னை  நான் எந்த உடைகளையும் எடுத்து வரவில்லை நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் எப்படி தனியாக விட்டுவிட்டு செல்ல முடியும் என்று கூறினார். அதற்கு கவலை வேண்டாம் அம்மா நான் உங்கள் வீட்டில் சொல்லி உங்கள் மருமகனிடம் பாப்பாவிற்கு உங்களுக்கும் தேவையான உடைகளை கொண்டு வந்து தரச் சொல்கிறேன் என்றார் அந்த ஊழியர். பாப்பா இப்படியிருக்கையில் பேருந்தில்  ஏறி இறங்க வேண்டாம் பின்னர் ஏதாவது பிரச்சனை என்று வந்தால் என்ன செய்ய முடியும். நீங்களும் பாப்பாவை பார்த்துக்கொண்டு இங்கேயே இருங்கள் நாங்கள் உங்கள் வீட்டில் சொல்லி உங்களுக்கு தேவையானவற்றை கொண்டு வந்து தர சொல்கிறோம் என்றார் அந்த ஊழியர்.

 மதுவின் கணவருக்கு தகவல் தரப்பட்டது. அன்று  இரவு  மதுவின் கணவர் வந்து மதுவை பார்த்துவிட்டு மதுவிற்கு தேவையான பொருட்களை கொடுத்து விட்டுச் சென்றார். எவ்வளவுதான்” பிறந்த வீட்டில் அன்பைப் பெற்றாலும், மனம் கணவரின் அன்பையே  நாடும் இது தமிழ்நாட்டில் பிறந்த எல்லா பெண்களுக்கும் உரிய மகத்தான எதிர்பார்ப்பாகும். இப்படி இருக்கையில் மதுவிற்கு மட்டும் இந்த ஆசை இல்லாமல் இருக்குமோ? மதுவிற்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தன் கணவர் முகத்தை பார்க்கும் போது சிறிது சந்தோசம் ஏற்படும்.   தனது கணவருடன் இருக்க வேண்டுமென்று என்று ஆசை இருக்கு மதுவிற்கு .

 மறுநாள் பொழுது விடிந்தது அறுவை சிகிச்சைக்கான எல்லாம் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மதுவின் விழிகள் இரண்டும் தன் கணவனின் முகத்தையே தேடியது.  அறுவை சிகிச்சை அறைக்கு செல்வதற்கு ஒரு தடவையாவது கணவரின் முகத்தை பார்த்து விடவேண்டும் என்று கடவுளை வேண்டினாள். அவள் வேண்டுதல் கடவுளின் செவியில் விழுந்தது கணவரை அறைக்குள் நுழையும்போது பார்த்துவிட்டுச் சென்றாள்.

அன்று அரசு மருத்துவமனையில் 5,6 அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் மது ஐந்தாவது நபராக அறுவை சிகிச்சை அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். மயக்க மருந்து செலுத்துவதற்கு படுக்கையில் படுக்கச் செல்லும் பொழுது அவள் நிலைதடுமாறி கீழே விழப் பார்த்தாள் – அப்போது அருகில் உள்ள மருத்துவர் பிடித்துவிட்டார்கள் இல்லை என்றால் இரு உயிரும் அப்போது பிரிந்து இருக்கும். கீழே விழக் காரணம் வயிறு தொங்கியபடி இருப்பதே ஆகும்.

மருத்துவர்கள் அனைவரும் கடவுள் என்று நம் அழைப்பதற்கு காரணம் என்பதை உணர்ந்தாள். வயிற்றில் கத்தியை வைத்து கிழித்த உடனே ரத்தம் பீச்சியடித்தது.அதனால் அவள் அறுவை சிகிச்சை அணிந்த உடை எல்லாம் ரத்தக்கரை பட்டுவிட்டது. மேலும் கண்கள் மூடப்பட்ட நிலையில் வயிற்றில் இருந்து கால்வரை உணர்வு இல்லாதபடி மயக்க ஊசி செலுத்தப்பட்டு இருந்த நிலையில் மதுவிடம் மருத்துவர்கள் பேச ஆரம்பித்தார்கள் உன் பெயர் என்னமா? ஏன் இவ்வளவு வீக்கா உள்ள.நீ கர்ப்பமாக இருந்தபோது என்ன உணவு சாப்பிட்டாய்?சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாயா, இல்லையா? என்று கேட்க ஆரம்பித்தார்கள்.  அதற்கு என் பெயர் மது எனக்கு என் மாமியாரிடம் எதுவும் சாப்பிட தரமாட்டார்கள் . இது சாப்பிட கூடாது அது சாப்பிடக்கூடாது என்று எப்பயும் வீட்டில் சண்டை நடந்து கொண்டே இருக்கும் வயிறு நிறைய சாப்பாடு தர மாட்டார்கள் என்றால் மருத்துவரிடம் மது. நீ காதல் திருமணம் செய்துகொண்டிய என்றார் மருத்துவர். ஆம் காதல் திருமணமம் இருவரும் வீட்டின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெற்றது என்றாள்.

 இப்போது அறுவை சிகிச்சை முடிந்தது ஆண் குழந்தை பிறந்தது. இன்னொரு அதிர்ச்சி மதுவின் அம்மா வீட்டிலும், மதுவின் கணவர் வீட்டிலும் பெண் குழந்தையை எதிர்பார்த்தார்கள்  அவர்கள்.  ஆனால் ஆண் குழந்தை பிறந்தது குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்து விட்டனர் இப்போது ரூமிற்கு அழைத்து வரும்போது மதுவின் உடையில் ரத்தக்கறை பட்டிருப்பதால் துணியால் உடலில் சுற்றி போர்வையால் மூடப்பட்டு ரூமிற்கு  அழைத்து வரப்பட்டாள் மது.

 ரூமுக்கு வந்தவுடன்” பயங்கர குளிர்” எடுத்து வலிப்பு வந்தது உடனே மருத்துவர்கள் சற்று அதிர்ந்து விட்டனர் அனைத்து மருத்துவர்களும் மதுவின் அறைக்கு வந்து  கரண்டி நெஞ்சில் வைத்து  ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிரை பிழைக்க வைத்தார்கள். இதனை பார்த்ததும் மதுவின் அம்மா மயங்கிவிட்டனர். மதுவின் அன்னைக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்குப் பிறகு மதுவை  அனைவரும் பார்த்தார்கள். இப்படியிருக்கையில் அடுத்த பிரச்சினை கிளம்பியது மதுவில் மாமியார் எப்படி, யாரை கேட்டு குடும்ப கட்டுப்பாடு செய்ய சொன்னீங்க என்று சண்டை போட்டனர் உடனே அந்த வழியாக வந்த மருத்துவர் உனக்கு எல்லாம் பதில் தர முடியாது நீ  இங்கே நின்று சத்தம் போடக்கூடாது வெளியே போமா என்றார் மருத்துவர்.

 வாயு கலைந்தது மதுவிற்கு மட்டும் வாயில்  கலையவில்லை தண்ணீரைத் தவிர வேறு எதுவும் தரவில்லை ஊசி தொடர்ந்து போட்டனர் பின்னரே வாயு  வெளியேறியது . அடுத்த சோதனை காத்துக் கொண்டிருந்தன மதுவின் தந்தைக்கு மூன்று நக்கலாய், மாற்றுவதற்கு கூட உடை இல்லாமல் மருத்துவமனையில் வெளியே அமர்ந்திருந்தார். மகளின் நிலையை அறிந்து சோகமாக இருந்தார்.இதனை அறிந்த மதுவின் கணவன் தனது மாமாவிற்கு இரண்டு சட்டை வாங்கி தந்தார்.

 மதுவிற்கு அடுத்த சோதனை ஐந்தாம் நாள் தண்ணீர், பால், இளநீர் என்று இப்படி வரிசையாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்து ஒன்றும் சேரவில்லை அனைத்தும் வாந்தியாக வெளியே வந்தது. வயிறு வீங்க தொடங்கியது. எனவே மதுவின் மூக்கு வழியாக ஒரு டியூப் போட்டு தொண்டை வழியாக வைத்து வயிற்றில் உள்ள நீரை எல்லாம் எடுத்தார்கள். அடுத்தது அறுவை சிகிச்சை முடிந்தது நிறைய ரத்தம் நிறைய  வீணாக போனதால் ரத்தம் தேவைப்பட்டது  யாராவது மதுவிற்கு  ரத்த தானம்  செய்தால் மட்டுமே இரத்தம் வழங்கப்படும் என்றார்கள் மருத்துவர். மருத்துவர் சொன்ன உடனே பதில் தந்து விட்டுச் சென்ற ரத்தம் வழங்கினார்கள் மேலும் மதுவிற்காக பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணின் கணவரும் ரத்தத்தை தானமாக வழங்கினார் .

 ஒரு கையில் ரத்தம் மற்றொரு கையில் குளுக்கோஸ் மூக்கின் வழியே ஒரு டியூப்  ஆப்ரேஷன் செய்த கழிவுநீர் வெளியேற ஒரு டியூப் இந்த ம மாதிரி மதுவின்  நிலை கவலைக்கிடமாக இருக்கு. இந்நிலையிலும் மதுவின் மாமியார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன குடிக்கக் கொடுத்தார்கள் என்று கேட்டு ஒரு வம்பு சண்டை. மதுவை பார்க்க மதுவின் கணவர் வருவதை மாமியார் விரும்பவில்லை ஏன் இங்கு வந்தான் வேலைக்குப் போகாமல் என்று மதுவின் மாமியார் மதுவின் அன்னையிடம் சண்டை போட்டனர்.   பொண்டாட்டியை பார்க்க புருஷன் வரக்கூடாதா,அவள் என்ன உங்கள் மகனின் மனைவி என்று மதுவின் அன்னை கோபமாக பதில் அளித்தார். ஏழாம் நாளே மது எல்லாரிடமும் நன்றாக பேசினாள். அடுத்த சோதனையும் வந்தது. இந்தமுறை மதுவிற்கு அல்ல மாற்றாக மதுவின் குழந்தைக்கு வந்தது. மதுவின் குழந்தைக்கு மஞ்சள் காமாலை வந்து விட்டது. மதுவின் கணவன் குழந்தையை ஐந்தாம் நாளில் வந்து தூக்கினார் – காரணம் பெண் குழந்தை இல்லை என்ற மன வருத்தம்.

 பெண் சிசு என்றாலே

 கருக்கலைப்பு செய்யும்

 பலர் வாழ்கின்ற சமூகத்தில்

 பெண் சிசுவை நேசிக்கும்

 மதுவின் கணவர் ஒருவகையில் ஹீரோதான்.

 மதுவில் குழந்தை மஞ்சகாமலை என்பதால் இன்குபேட்டரில்  இருப்பதால் பாலூட்ட மட்டுமே மதுவிடம் தருவார்கள். ஆனால் குழந்தை கீழே உள்ள அறையில் இன்குபேட்டரில்  வைக்கப்பட்டது.  மது இரண்டாம் மாடியில் உள்ளார். கீழிருந்து மாடிக்கு வருவதற்குள் மதுவின் குழந்தை தூங்கிவிடும் இதனால் தாய்ப்பாலை பீச்சி சங்கில்  ஊற்றி விடுவாள் இப்படியே 15 நாட்கள் சென்றன.15ஆம் நாள் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பினார்கள் ஒரு சிறிய குறையுடன் அடுத்த ஆறு மாதத்தில் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்- காரணம் குடல் கீழே இறங்கிவிட்டது மற்றபடி தாயும் சேயும் நலம். அடுத்த 6 மாதத்தில் அந்த சிகிச்சையும் செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறாள் இக்கதையின் நாயகி மது.

 “பெண்ணாய் பிறந்தவர்களுக்கு மறுபிறப்பு பிரசவம்தான் “.

ஒரு பெண் தாய்மை என்ற பெயரைப் பெறுவதற்கு “மறுபிறப்பு” எடுக்கிறாள். அந்தத் தாய்மையின் பத்துமாத போராட்டத்தில் மறு பிறப்பு எடுத்து குடும்பத்தில் அடுத்த வாரிசை தருகிறாள்.

 நம் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் பெண்களைப் போற்றுங்கள் மாமியாரே நீங்களும் இறந்த காலத்தில் மருமகள்தான் நீங்கள் எங்களை மகளாய் நினையுங்கள் நாங்கள் மறுபிறவி எடுக்க.

 இனிமேல் யாரும் என் வாழ்க்கையில் மட்டும் இவ்வளவு சோதனை,. அடி மேல் அடி விழுகிறது என்று புலம்பாதீர்கள் இந்த பெண்ணின் மறுபிறப்பு போராட்டத்தை விட நம் கஷ்டம் பெரிதல்ல கஷ்டமும் கடந்து போகும்,இதுவும் கடந்து போகும். வாழ்வில் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை என்று புலம்புவர்களுக்கு இந்த கதை  சமர்ப்பணம்.

Exit mobile version