அறிவியல் மேம் பாட்டு அறிகுறி யாக பல கருவிகள் பொருத்தப்பட்டு அதன் மெல்லிய ஒலி களுக்கு இடையே அப்பா ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்.
இன்றுடன் 5 முழு நாட்கள் ஓடிவிட்டன.
பெரிய கதவில் பொருத்தி இருந்த கண்ணாடி வழியே சுஜா அப்பாவை பார்த்தாள்.
அப்பா மயக்கம் அடித்து கீழே விழுந்து விட்டார் என துணை க்கு இருக்கும் குமார் போன் செய்து ஆஸ்திரேலியா வில் இருந்து அடித்து பிடுச்சு 5 வயசு மகள் 8 வயசு மகன் இருவரையும் தோழி சக்தி யிடம் ஒப்படைத்து விட்டு ஓடி வந்தாள்.
மூளை சிறப்பு பிரிவு, எலும்பு சிறப்பு பிரிவு, நரம்பு மண்டல சிறப்பு பிரிவு மருத்துவ நிபுணர் ர்கள் அந்த பெரிய 5 நட்சத்திரம் விடுதி போல் இருந்த மருத்துவ மனை
எல்லாம் இருந்தும் அப்பா விற்கு என்ன என்று தெரிய வில்லை.
நல்ல வேளை அவள் தோழி யமுனா இந்த மருத்துவ மனையில் மகப்பேறு பிரிவில் பணியில் இருந்தாள்.
மாலை 5 நிமிடம் இவளை உள்ளே அனுமதி.
சீர் சிறக்கு மேனி பசேல் பசே லென
நூ பு ர்த்தி னோசை கலீர் கலீ ரென
திருப்பு கழ் ஊஞ்சலி ல் அமர்ந்து பாடும் அழகு தனி.
எல்லா கிரிக்கெட் மேட்ச் பார்ப்பார்.
காலை எழுந்து நூல் பிடித்து அட்டவணை போட்டது போல் வேலை செய்வார்.
அப்பா எழு வாரா?
எந்த பாகம் வேலை செய்யும்?
எவை செய்யாது?
பேசுவாரா, சாப்பாடு வாரா?
நடப்பரா?
எது ஞாபகம் இருக்கும்?
எது இருக்காது?
அம்மா இறந்து 6 வருடம் ஓடிவிட்டன.
அப்பா குமாரை துணைக்கு வைத்து கொண்டு மயிலாப்பூரில் 2 அறை கொண்ட வீட்டில் நிம்மதியா இருந்தார்.
ஏன் இப்படி?
யமுனா வந்தாள்.
இவளை தேனீர் அருந்தும் இடத்திற்கு கூட்டி சென்றாள்.
Suja தேநீர் அருந்தி முடிக்கும் வரை காத்து இருந்தாள்.
சுஜி நான் சொல்ல போவதை பொறுமை யா க கேளு.
அப்பா விரைவில் நலம் பெற என்
ப்ராத்தனைகள்.
ஆனால் கொஞ்சம் சிக்கல்.
ஒரு நாள் 40,000 கட்டி இனி இங்கு இருப்பது சாத்தியமா என தெரியவில்லை.
கருவிகள் உதவி யுடன் வீட்டில் வைக்கலாம்
மருத்துவ உபகரணம் நாள் ஒன்றுக்கு கொஞ்சம். ஒரு ஆள் கூடவே இருக்கு மாதம் 40,000
ஆகும்.
உன் அத்தை பையன் அருண் கேட்டுப்பார்
குமார் ரொம்ப விவரம் கிடையாது.
அருணா?
இவள் சொந்த அத்தை பையன்
இவர்கள் வீட்டில் அனைவரும் டாக்டர், ஆடீ ட்டர், கல்லூரி விரிவுரை யாளர், வங்கி நிர்வாகிகள், என இருந்த நிலையில்
ஒரு செடி விற்கும் கடை, இயற்கை விவசாயம் என செய்து கொண்டு திருமணம் ஆகாமல் 40 ஐ நெருக்கு ம் அருண்
இவள் அம்மா விற்கும், இவளுக்கு ம் அவனை கண்டாலே பிடிக்காது.
இப்போ வேறு வழி இல்லை
அவனை தான் கேட்க வேண்டும்.
நீ எத்தனை நாள் தங்க முடியும்?
யோசனை செய்.
வீட்டில் எல்லா ஏற்பாடு களும் செய்து விட்டு, அருண் பொறுப்பில் விட்டு செல்.
அருணை கைபேசி யில் தொடர்ப்பு கொண்டாள்.
தன் துணி மணி பை சகிதம் 2 மணி நேரம் கழித்து வந்து சேர்த்தான்.
நீ ஆஸ்திரேலியா செல்ல டிக்கெட் ஏற்பாடு செய்.
மாமா என் பொறுப்பு என்றான்.
அப்பா அவசர கால ஊர்தி யில் சகல மருத்துவ உபகரணங்கள், பகுதி நேர செவிலி, மருத்துவ கட்டி ல் என அறை யில் படுக்க வைக்க பட்டார்.
ஆஸ்திரேலியா கிள ம்பு முன் அப்பா கட்டில் அருகே நின்றாள்.
அப்பா இறைவனின் எந்த படைப்பு க்கும் அர்த்தம் உண்டு.
நீ சென்று வா என சொல்லு வது போல் இருந்தது.
அருண் கை பிடித்து கொண்டு உன்னை சிறு வயதில் கண்டபடி பேசிட்டு இப்போ உன்னை விட்டா வேறு வழியில்லை
என கண்ணீர் மல்க நின்றாள்.
ச்சே என் மாமா நான் செய்கிறேன்.
நெஸ்ட் ட்ரிப் நீ வரும் போது மாமா
வெல்கம் மை சைல்ட் ன்னு ஏர்போர்ட் ல் நிற்பார்.
கவலை படாதே என்றான்.