பீஷ்மா “வின் குறள் நெறிக்கதைகள்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 18 பீஷ்மா “வின் குறள் நெறிக்கதைகள்

மாதவன் அன்று கோயிலுக்குச் சென்றபோது கூட்டம் கம்மியாகவே இருந்தது…,

அம்பாளைத் தரிசித்த பின், பிரகாரத்தில் பிரதட்ஷணம் செய்யும் போது அம்பாளிடம் ஒரு பெண்மணி, தன் கைகளிரண்டையும் விரித்தவாறு உரத்த குரலில் ஏதோ முறையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கடக்கும்போது…,

அந்தப் பெண்மணி, ” கஷ்டப்பட்டு இத்தனை நாள் வளர்த்த என்னைத் தூக்கி எறிஞ்சுட்டுப் போறாளே!
இப்படி என்ன நிர்க்கதியா விட்டுட்டியே! “…,

ஆவேசமாய்க் கைகளை விரித்து, அம்பாளிடம் வாய் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தவள் எதேச்சையாய்
மாதவனைப் பார்க்க, மாதவன் தன்னையறியாமல் புன்னகைத்தான்…,

அந்தப் புன்னகை அந்தப் பெண்மணிக்கு ஓர் அந்யோன்ய உணர்வைக் கொடுக்க, அவனிடம் தன் குறைகளைச் சொல்ல ஆரம்பித்தாள்…,

” தம்பி, எனக்கு ஒரே பொண்ணு.. என் புருஷன், பொண்ணுக்கு ஆறு வயசு இருக்கும் போதே பாழாப் போன குடியினால போய்ச் சேந்துட்டாரு.. நான் வீட்டு வேலை செஞ்சு, மகளைக் கஷ்டம் தெரியாம வளத்து நல்லா படிக்க வச்சு…,

அவ இப்ப ஒரு வேலைலயும் சேந்து, சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா.. என் கஷ்டம் எல்லாம் தீந்து இனிமே அவ என்னப் பாத்துப்பான்னு நம்பினேன்ப்பா “…,

சிறிய இடைவெளி விட்டு, மாதவன் கவனிப்பதை உறுதி செய்து…,

” அவளை யாரோ மயக்கி, கல்யாணம் செஞ்சுக்கப் போறானாம்ப்பா.. அவ இத்தன நாளா கஷ்டப்பட்டு வளர்த்த என்னை விட்டுட்டு அவன் கூடப் போறேன்னு பிடிவாதமா இருக்காப்பா “…,

மிகுந்த ஆற்றாமையுடன் பரிதாபமாக அழும் பெண்மணியைப் பார்க்கும் போது, என்னவோ செய்தது மாதவனுக்கு…,

ஏதாவது செய்து அந்தப் பெண்மணிக்கு ஆறுதல் செய்ய நினைத்தான்…,

” அம்மா, உங்க பொண்ண நான் பார்க்கலாமா? “…,

” அவ எங்கிட்ட கோவிச்சுக்கிட்டு ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கிக் கிட்டுருக்காப்பா “…,

” வாங்க.. அங்க போய்ப் பார்க்கலாம் “…,

தனது பைக்கில் அப் பெண்மணியை அழைத்துக் கொண்டு அந்த லேடீஸ் ஹாஸ்டல் சென்றான்…,

ஆபீஸுக்குக் கிளம்பும் அவசரத்தில் அங்கிருந்த அனைத்துப் பெண்களும் பர பர வென்றிருக்க, தனது மகளை அழைக்கும்படி, அங்கிருந்த வார்டனிடம் கெஞ்சினாள் அந்தத் தாய்…,

வந்த மகளைப் பார்த்து அதிர்ந்தான் மாதவன்…,

” நீ.. நீ.. நீதான் இவங்க பொண்ணா? “…,

மருண்ட மகள், தன் தாயைப் பார்த்து சீறினாள். ” நீ ஏம்மா இங்க வந்தே?.. அதுவும் இவரோட? “…,

மாதவனிடம், ” நீங்க எங்க இங்க? “
ஆச்சர்யமாய் வினவினாள்…,

” உஷா, நீ ஏன் என்கிட்ட உன் அம்மாவப் பத்தி எதுவுமே சொல்லல?.. யாருமே உனக்கு இல்லன்னு ஏன் போய் சொன்ன? பொய்யில நம்ம வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டிய அவசியமென்ன? “

அப்பெண்மணி திகைத்துப் போய் அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்…,

” அம்மா, நீங்க கும்பிட்ட அம்பாள் உங்களக் கை விடல.. உங்க பொண்ணு நீங்க கஷ்டம் தெரியாம வளர்த்ததனால உங்களத் தூக்கி எறிஞ்சாலும், கஷ்டப்பட்டு வளர்ந்த எனக்கு அம்மாவோட கஷ்டங்களும், இஷ்டங்களும் நல்லாவே தெரியும்.,

நீங்களும் எனக்கு அம்மாதான்.. என்னோட அம்மா உங்களத் தன்னோட வச்சுக்க மறுக்க மாட்டாங்க.. எனக்காக உஷாவ மன்னிச்சு அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சு வப்பீங்களா?
உங்க அனுமதி இல்லாம எங்க கல்யாணம் நடக்காது “…,

கம்பீரமாய் மாதவன் தன்னைக் கேட்ட விதத்தில் முற்றிலும் மனமிளகிய உஷாவின் தாய் சொல்வதொன்றும் அறியாமல் பிரமித்து நின்றாள்…,

” அம்மா, பிள்ளையோ, பொண்ணோ வளரும் போது தங்கள் பெற்றோர்களின் கஷ்டமறிந்து வளர்ந்தால்…, வளர்ந்தால் என்ன…, வளர்த்தால் அவர்களுக்குப் பெற்றோர்களின் அருமையும், பெருமையும் புரியும்…,

நான் உங்க வளர்ப்பைக் குறை சொல்வதாக நினைக்காதீர்கள்.. உங்க பொண்ணு உஷாவின் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “…,

” அம்மா, என்ன மன்னிச்சுடும்மா.. இவரக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நீ தடையா யிருந்ததனால, நான் எனக்கு அம்மா இருக்கேங்கறத மறச்சேன் “

அழும் மகளை, ஆறுதலாய் அணைத்து, ” தம்பி, அம்மா கிட்ட கூட்டிட்டுப் போங்க.., சம்பந்தம்
பேச “…,

” இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை “

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் மூவருக்கும் துணையாக இருப்பது இல்லறத் தலைவனின் கடமையாம்…,

” அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு “

உயிரும், உடலும் போல் அன்பும், செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாம்.

Exit mobile version