அதோ அவள் வருகிறாள்……

தாவணி அணிந்த செம்பருத்தி
எழில் நடைக்கொண்டு வருகிறாள் !
என்னருகில் வரும் முன்னே
மனதின் வாசலை தட்டுகிறாள் !

அருகில் வந்து விட்டாள்……

நொடிக்கு ஒருமுறை மலரும்
கருவண்டு விழுங்கிய கண்கள் !
என்பார்வையை விலக்க முடியாமல்
அவளிடம் உறைந்து நிற்கிறேன் !

பேசிக் கொண்டு இருக்கிறாள்……

ஆற்றும் சொற்களை உதிர்க்கும்
மென் இதழ்களின் வரிகளில்
வாழ்க்கை பயணிக்க தொடங்கும் !
இதயத்தில் பதியும் இதழ்கள்!

கடந்த நாட்கள் நினைவில்லை……

கண்களில் அவள்
தென்பட வில்லை
கொஞ்சம் கொஞ்சமாக
என்னுள் கரைகிறாள் !

கண்மணியின் குரல்
என்னைச் சுற்றிக் கேட்கிறது !
தேன்மொழியின் வாசம்
நுகரும் காற்றில் அணைக்கிறது !

தனியாக அவள் தெரிவதில்லை
நானும் அவளும் வேறில்லை !

-மதிரா

இதையும் படியுங்கள் : பச்சை மின் காதல்

Exit mobile version