பச்சை மின் காதல்

Online

நீயும் நானும்
பேசுவோம் என
நாம் காத்திருக்கிறோம்.

**

chats

ஸ்மைலிகள் பேசி
முடிந்த பிறகு – நம்
உரையாடல் தொடங்குகிறது.

**

Type a message

எழுத்துகள் எல்லாம்
கரைந்தோடுகின்றன.
உணர்வுகளை எம்மொழியில்
எழுதுவது?

**

starred messages

உன் நட்சத்திர சிரிப்பை
விட ஒன்றை
சேமித்து விட முடியுமா என்ன?

**

last seen

நீ அடுத்து ஆன்லைன்
வரும் வரை பார்க்க
உன்னை தந்து விட்டுப் போயேன்…

**

Search

தேடிக் கண்டடையலாம்
கீ வேர்ட் சொல்லி விட்டுப் போ.

**

Status

உன் எளிமையான
புன்னகையை அலங்கரிப்பதற்கு
பெயர் ஸ்டேட்டஸாம்.

– சொற்கோ

இதையும் படியுங்கள் : சிற்பிக்காக…

Exit mobile version