நாளை நிறைவடைகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

பிளஸ்-2, பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு பெற்ற நிலையில், அவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதையடுத்து 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள். இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை வேலைநாட்களில் நடைபெற உள்ளது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண்ணை ஆன்லைன் வாயிலாக வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version