அண்ணா பல்கலையில் 41 புரஜக்டர்கள் திருட்டு

அண்ணா பல்கலையில் 41 புரஜக்டர்கள் திருட்டு நடந்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் சி.வி.ராமன் சயின்ஸ் கட்டிடம் ஐந்து மாதங்களுக்கு முன்பு கொரோன சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்புவிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதம் அன்று அந்த சயின்ஸ் பார்க் கட்டிடம் கொரோன சிறப்பு வார்டில் இருந்து மீண்டும் பழைய அண்ணா பல்கலைகழக கட்டிடமாக மாற்றப்பட்டது.

கடந்த 17ம் தேதி அண்ணா பல்கலைக்கழக ஊழியர் முத்துகுமார் இந்த கட்டிடத்தை சுத்தம் செய்ய வந்த போது, அங்கிருந்த 16 லட்சம் மதிப்புள்ள 41 புரஜக்டர்கள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து, பல்கலைகழக நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், பல்கலைக்கழக பேராசிரியர் குணசேகரன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் அண்ணா பல்கலை கழகத்திற்கு வந்த போலீசார் மட்டும் கைரேகை நிபுணர்கள் திருடப்பட்ட 41 புரஜக்டர்கள் வைக்கப்பட்டிருந்த அறை முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் பல்கலை கழக வாசலில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Exit mobile version