அப்ப என் டிகிரி?..பி.இ அரியர்ஸ் தேர்வுக்கு ஆல் பாஸ் கொடுக்க முடியாது – எஐசிடிஇ அதிரடி.

In this picture taken on October 27, 2018, Indian undergraduate students discuss their project as they take part in HackCBS, a 24 hour event of software development also called 'hackathon', at the Shaheed Sukhdev College of Business Studies (SSCBS) in New Delhi. - Students from all over India gathered in teams to take part in a challenge to develop their ideas in the fields of Internet of Things (IoT), Artificial Intelligence (AI), Blockchain, Mobility and Education and Financial technology. (Photo by XAVIER GALIANA / AFP) (Photo credit should read XAVIER GALIANA/AFP via Getty Images)

பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது” என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, இறுதியாண்டு மாணவர்கள் தவிர அரியர் தேர்வுக்கான கட்டணம் செலுத்திய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்(AICTE)  மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இது தொடர்பாக, அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி” என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது  என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவு என வெளியாகியுள்ள தகவல் ஏழு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version