ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என கூறியது அண்ணா பல்கலைக்கழகம்.
கொரோன ஊரடாங்கால் இறுதி ஆண்டு தேர்வை தவிர்த்து மற்ற பருவ தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கூறியிருந்தார். இந்த முடிவை எதிர்த்தும் எழுதாத தேர்வு கட்டணத்தை செலுத்த நிர்பந்திக்க கூடாது எனவும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அண்ணா பல்கலைக்கழக சார்பாக அளிக்கப்பட்ட பதில் மனுவில் அதிகளவு தேர்வு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் நான்கு லட்ச மாணவர்களுக்கு தேர்வு நடத்த 37 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டு தான் கட்டணம் வசூலிக்க பட்டதாக கூறப்படுகிறது. தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் விடைத்தாள் திருத்துவது தவிர்த்து மற்ற எல்லாவற்றிற்கும் செலவாகி உள்ளது என தெரிவித்தது.
மேலும் கட்டணத்தை திருப்பி செலுத்தினால் நிதி சுமை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த வழக்கின் வாத பிரதிவாதி வாதங்கள் முடிந்த நிலையில் இதற்கு தீர்ப்பு வழங்கிய நிலையில் தேர்வு கட்டணம் வசூலித்தது நியாயம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதால் மனுதாரரின் கோரிக்கை ஏற்கமுடியாது என நீதி மன்றம் கூறியது. இன்னும் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் இன்னும் நான்கு வாரத்தில் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறியது.