கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

கன்னியாகுமரி : 2025–26 கல்வியாண்டில் 57 முன்னணி நிறுவனங்கள் மூலம் 667 வேலைவாய்ப்பு வாய்ப்புகள்; 511 மாணவர்கள் பணியமர்த்தப்பட்டு சாதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (RCET), தரமான பொறியியல் கல்வி, புதுமை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை சார்ந்த கற்றல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

மாணவர்கள் வகுப்பறையில் பெறும் கல்வியை நடைமுறைத் திறன்களாக மாற்றி, சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குவதை கல்லூரி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

667 வேலைவாய்ப்பு வாய்ப்புகள்

2025–26 கல்வியாண்டில் RCET மாணவர்கள் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளனர். 57 முன்னணி நிறுவனங்கள் மூலம் மொத்தம் 667 வேலைவாய்ப்பு வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 511 மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கான பயிற்சி, வழிகாட்டுதல், தொழில் ஆலோசனை, இன்டர்ன்ஷிப், திட்ட அடிப்படையிலான கற்றல் மற்றும் தொழில் நிறுவனங்களுடனான தொடர்பு ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் பலனாக இந்த வேலைவாய்ப்பு சாதனை அமைந்துள்ளது.

NAAC ‘A+’ அங்கீகாரம்

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள பால்குளத்தில் 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட RCET, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, AICTE அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

NAAC மதிப்பீட்டில் 4-க்கு 3.46 CGPA பெற்று ‘A+’ அங்கீகாரத்தையும், முக்கிய இளநிலைப் படிப்புகளுக்கு NBA அங்கீகாரத்தையும் கல்லூரி பெற்றுள்ளது.

சரோஜா கல்விக் குழுமத்தின் தலைவர் கே. நீல மார்த்தாண்டன் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், துணைத் தலைவர் டாக்டர் என். நீல விஷ்ணு, நிர்வாக இயக்குநர் டாக்டர் வி.எம். பிளஸ்ஸி ஜியோ மற்றும் முதல்வர் டாக்டர் ஆர். ராஜேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது.

வகுப்பறையைத் தாண்டிய கற்றல்

B.E./B.Tech, M.E./M.Tech, MBA, MCA, Ph.D. மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் RCET-ல் வழங்கப்படுகின்றன.

‘TLP@RCET’ என்ற கற்பித்தல்–கற்றல் முறையின் கீழ் வழக்கமான வகுப்பறைக் கல்வியுடன், அனுபவ அடிப்படையிலான கற்றல், நடைமுறைப் பயிற்சி, தொழில்துறை ஆதரவிலான ஆய்வகங்கள், இன்டர்ன்ஷிப், திட்டப் பணிகள், குழுச் செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் அணுகுமுறைகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

40-க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்புகள், கிளப்புகள் மற்றும் தொழில்முறை சங்கங்களின் மாணவர் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தொழில்நுட்ப அறிவுடன் படைப்பாற்றல், தகவல் தொடர்பு, தலைமைத்துவம் மற்றும் குழுவாகச் செயல்படும் திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.

70-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கல்லூரியில் பணியாற்றுகின்றனர். Honours மற்றும் Minor Degree படிப்புகள், ஆராய்ச்சி, புதுமை முயற்சிகள் மற்றும் தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளிலும் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

தேசிய அளவில் அங்கீகாரங்கள்

கல்வி மற்றும் வளாக மேம்பாட்டுக்காக RCET பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது. Collegedunia Connect 4.0 வழங்கிய ‘Emerging Engineering College – South Zone Award’, NSF India வழங்கிய 2025-ஆம் ஆண்டுக்கான ‘Best Green Campus Award’ உள்ளிட்ட அங்கீகாரங்களை கல்லூரி பெற்றுள்ளது.

மேலும், பொறியியல் கல்வியில் சிறப்பான செயல்பாட்டுக்காக The Institution of Engineers (India) சார்பில் புதுடெல்லியில் வழங்கப்பட்ட 5-வது ‘IEI Engineering Education Excellence Award 2026’-ஐயும் RCET பெற்றுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

SPECTRA 2026: தொழில்நுட்பம் முதல் கலை வரை மாணவர்களின் திறமைக்கு ஒரே மேடை!

கல்வி என்பது வகுப்பறையுடன் முடிந்துவிடக்கூடாது என்ற அணுகுமுறையின் அடிப்படையில், தொழில்நுட்பம், படைப்பாற்றல், தொழில்முனைவு மற்றும் கலை ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைக்கும் வகையில் ‘SPECTRA 2026’ விழாவை RCET நடத்துகிறது.

மாணவர்கள் தங்களது அறிவையும் திறமைகளையும் வெளிப்படுத்துவதுடன், புதிய வாய்ப்புகளை ஆராயவும், சக மாணவர்களுடன் கலந்துரையாடவும், புதுமையான சிந்தனைகளை நடைமுறை அனுபவங்களாக மாற்றவும் இந்த விழா களம் அமைக்கிறது. இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஐ.ஏ.எஸ் தொடங்கி வைத்தார்.

TECHNOVA – தொழில்நுட்பமும் புதுமையும்

SPECTRA 2026 விழாவின் முக்கிய தொழில்நுட்பப் பகுதியாக ‘TECHNOVA’ இடம்பெறுகிறது. மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மற்றும் படைப்பாற்றலை சோதிக்கும் பல்வேறு போட்டிகள் இதில் நடத்தப்படுகின்றன.

‘Mega Technical Challenge 2026’ மூலம் நிஜ உலகில் எதிர்கொள்ளப்படும் சிக்கலான பிரச்னைகளுக்குப் புதுமை மற்றும் குழு முயற்சி மூலம் தீர்வுகளை உருவாக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Hackathon, Competitive Programming, Design Challenges, AI Ideathon, Prompt Engineering, Data Science, Data Analytics மற்றும் Data Visualization உள்ளிட்ட தற்போதைய தொழில்நுட்பத் துறைகளை மையமாகக் கொண்ட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

நாளைய போக்குவரத்தும் தொழில்துறையும்

‘Greenverse & Industrial Futureverse’ பகுதியில் நிலையான போக்குவரத்து, நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள், ஆட்டோமேஷன், ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகள் தொடர்பான புதிய யோசனைகளை மாணவர்கள் முன்வைக்கின்றனர்.

‘Vintage to Modern – Technology Expo’ மூலம் பழங்கால இயந்திரங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கணினித் தொழில்நுட்பத்தின் தொடக்ககாலம் முதல் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், IoT மற்றும் ஸ்மார்ட் சிஸ்டம்ஸ் வரையிலான தொழில்நுட்ப வளர்ச்சிப் பயணம் காட்சிப்படுத்தப்படுகிறது.

FLAVOURVERSE 2026 – மாணவர்களே தொழில்முனைவோர்

தொழில்நுட்பத்துடன் மட்டுமின்றி தொழில்முனைவுத் திறனை வளர்க்கும் வகையில் ‘FLAVOURVERSE 2026’ நடத்தப்படுகிறது.

உணவு, வாழ்க்கைமுறை மற்றும் தொழில்முனைவை இணைக்கும் இந்த நிகழ்வில் மாணவர்களே இளம் தொழில்முனைவோர்களாக மாறி, தங்களது தொழில் முயற்சிகளைத் திட்டமிடுவது முதல் வடிவமைத்து செயல்படுத்துவது வரை நேரடி அனுபவத்தைப் பெறுகின்றனர்.

வணிகத் திட்டமிடல், தயாரிப்புகளை காட்சிப்படுத்துதல், Branding, Promotion, வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் விற்பனை போன்றவற்றில் மாணவர்கள் நடைமுறை அனுபவத்தைப் பெறுகின்றனர்.

Best Product, Most Creative Concept, Best Stall, Best Decoration, Best Entrepreneurial Initiative, Best Sales Performance, Best Promotion, People’s Choice மற்றும் Best Team Spirit உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்படுகின்றன.

VIBRANCE 2026 – கலைத்திறன்களுக்கான மேடை

மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதற்கான கலாசாரப் பகுதியாக ‘VIBRANCE 2026’ இடம்பெறுகிறது.

குழு நடனம், மேற்கத்திய மற்றும் Fusion Dance, இசை நிகழ்ச்சிகள், Cultural Fusion மற்றும் Talent Showcase உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

விழாவைத் தாண்டிய கற்றல் அனுபவம்

SPECTRA 2026 வெறும் கல்லூரி விழாவாக மட்டுமின்றி, வகுப்பறையைத் தாண்டிய கற்றல் அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய முயற்சிகளை மேற்கொள்வது, குழுவாகச் செயல்படுவது, குழுக்களை வழிநடத்துவது, புதிய யோசனைகளைத் தெளிவாக வெளிப்படுத்துவது, பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் தொழில்முனைவின் நடைமுறை அம்சங்களை அறிந்துகொள்வது என பல்வேறு அனுபவங்களை மாணவர்களுக்கு இந்த விழா வழங்குகிறது.

தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வணிகம், படைப்பாற்றல் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை ஒரே மேடையில் இணைக்கும் SPECTRA 2026, மாணவர்கள் தங்களது திறமைகளை கண்டறிந்து, புதிய சவால்களை எதிர்கொண்டு, சாதனைகளை கொண்டாடுவதற்கான களமாக அமைகிறது.

Exit mobile version