அரசு, தனியார் பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை கிடையாது


தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியாளர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ”அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண் தொடர்பாக விளம்பரப் பலகை வைக்கக் கூடாது. மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

11-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்காக முதல்வரிடம் தேதி கேட்டிருக்கிறோம். அவர் குறிப்பிட்டவுடன் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அதேபோல ஆகஸ்ட் மாதத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார். 

Exit mobile version