அரசு தொடக்கப்பள்ளிகளில் சிற்றுண்டி தயாரிப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
- ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது
- மூலப்பொருட்கள் மணம், நிறம் உடையதாக இருக்க வேண்டும்
- வேறு வெளிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமாக இருக்க வேண்டும்
- தயார் செய்யப்பட்ட உணவை குழந்தைகளுக்கு வழங்கும் முன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அதை சாப்பிட்டு பார்க்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.