2ஆம் கட்ட CUET இளங்கலைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது.
ஆகஸ்டு 4,5&6 தேதிகளில் CUET இளங்கலைப் படிப்புகளுக்கான 2ம் கட்டத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை https://cuet.samarth.ac.in/ சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு https://cuet.nta.nic.in/
இந்த நிலையில் CUET முதுகலைத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தத்தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. செப்டம்பர் 01,02,03,04,05,06,07,09,10,11 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளன. கணினி முறையில் 3.57 லட்சம் தேர்வர்கள் முதுகலைத் தேர்வை எழுத உள்ளனர். சுமார் 500 இந்திய நகரங்கள் மற்றும் இந்தியாவிற்கு வெளியே 13 நகரங்களில் CUET முதுகலை தேர்வுகள் நடைபெறவுள்ளது. உடனடி தகவல்களுக்கு http://nta.ac.in மற்றும் https://cuet.nta.nic.in செல்லவும்” இவ்வாறு தெரிவித்துள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.
