தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு ஆகஸ்டு 22ம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023ம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ₹1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதில் 50% அரசுப்பள்ளி மாணவர்களும், 50% தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதிவாய்ந்த 11ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வுக்கு மாணவர்கள் தங்கள் பள்ளி வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை  https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆகஸ்டு 22ம் தேதிமுதல் செப்டம்பர் 9ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ₹50 செலுத்த வேண்டும்.

Exit mobile version