தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் ஆகஸ்டு 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுதேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ் திறனறித்தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ₹1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.10ம் வகுப்பு தரநிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 1ம் தேதி தேர்வு நடைபெறும்.
விருப்பம் உள்ள மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆகஸ்டு 22 முதல் செப்டம்பர் 9ம் தேதிவரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன்₹50 சேர்த்து தலைமை ஆசிரியரிடம் செப்டம்பர் 9ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
