பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசிநாளாகும்.
தமிழ்நாட்டில் 2022-2023ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த 19 துணைப்படிப்புகளில் (மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு & மருத்துவம் சார்ந்த பட்டயம்) 16,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
இந்த படிப்புகளுக்கு ஆகஸ்டு 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதுவரை 65,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் விண்ணப்பம் மற்றும் கட்டணங்களை சமர்ப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் சென்று விண்ணப்பிக்கலாம்.