1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் (Home work) தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 1ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதை முதன்மை கல்வி அலுவலர்கள் முறையாக அமல்படுத்த வேண்டும். பள்ளிகளில் பறக்கும் படையை கொண்டு ஆய்வு செய்து 1,2ம் வகுப்பு மாணவர்களுக்க்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். ஆயுவுக்குப்பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version