பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் அறிமுகம்

மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனமும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ல அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் மாணவர்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கப்பது, தொழில் முனைவோர் கலாசாரத்தை வளர்ப்பது, தலைமைத்துவ பண்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக ₹1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அறிவியல் ஆசிரியர்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி தரப்படும். தன்னார்வம் கொண்ட மாணவர்கள், சிறு குழுக்களாக பிரிந்து புதிய தொழில் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அதை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்களின் கண்டுபிடிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவர்களுக்கும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பள்ளிகள் மற்றும் மாவட்டங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version