இளங்கலை பட்டப்படிப்பிற்கான 2ஆம் ஆண்டு பருவத்தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்திட்டம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சில பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் 2ஆம் ஆண்டு பருவத்தில் தமிழ்மொழி பாடத்திட்டம் நடத்தப்படுவதில்லை என புகார்கள் வந்த நிலையில், இதனை சரிசெய்யும் விதமாக உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
அந்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, “உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களில் (அண்ணா மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் நீங்கலாக) இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2ஆம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்திட்டத்தினை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி, தமிழ் மொழி பாடத்திட்டத்தினை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.