ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் 1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வை செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கணினி வாயிலாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் -1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.