L.L.M படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை படிப்புக்கு (எல்எல்எம்) விண்ணப்பிக்க விரும்புவோர் www.tndalu.ac.in  என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

நாளை செப்டம்பர் 5ம் தேதி முதல் (05.09.2022) செப்டம்பர் 19ம் தேதி  (19.09.2022) மாலை 5:45 வரை  விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version