நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 17,78,725 பேர் எழுதினர். தமிழ்,ஆங்கிலம்,இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1,40,000 பேர் இந்த தேர்வை எழுதினர். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், நீட் தேர்வு முடிவும் காலதாமதமானது. இதற்காக பொறியியல் கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டது.,

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாளை (07.09.2022) வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதன்படி, மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nta.ac.in/  சென்று பதிவுஎண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version