புதுச்சேரியில் அரசு பள்ளி முதல்வர்கள் & தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்களது வழக்கமான பள்ளி நிர்வாக பணிகளுடன், மாணவர்களுக்கும் பாடம் நடத்த வேண்டும். இந்த விதிமுறைகள் கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.