CUET தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது

CUET நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை படிப்பில் சேர்வதற்கான CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்தது. இந்த நிலையில்  CUET தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, 6 கட்டங்களாக நடைபெற்ற CUET பொதுத்தேர்வு  ஆகஸ்டு 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. நாடு முழுவதும் சுமார் 60% மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.  இணைய வேகம் குறைவு காரணமாக ஜார்கண்டில் பல இடங்களில்  இத்தேர்வை நடத்த முடியவில்லை. அதில் பாதிக்கப்பட்ட 103 பேருக்கு விரைவில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ தேர்வு முடிவுகள் வெளியாகும்  என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version